வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில் நடந்த உத்திர நட்சத்திர பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள, ஐயப்ப சுவாமி கோவிலில் உத்தர நட்சத்திரமான நேற்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை நடந்தது. அதனை தொடர்ந்து, காலை, 7:30 மணிக்கு ஐயப்ப சுவாமிக்கு நெய் அபிேஷக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு, ஐயப்பனை வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.