திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் ஒரே நாளில் 85 திருமணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06பிப் 2026 04:02
கடலுார்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நேற்று ஒரே நாளில் 85 திருமணங்கள் நடந்தன.
கடலுார் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாதசுவாமி கோவில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான, இக்கோவிலில் திருமணம் நடந்தால் குடும்பம் சிறப்பாக இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில் இங்கு திருமணங்கள், நடப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தை மாத முகூர்த்த நாளான நேற்று கோவில் மண்டபத்தில், 85 திருமணங்கள் நடந்தன. திருமணம் முடிந்து மணமக்கள், பெற்றோர், உறவினர்களுடன் சுவாமி தரினம் செய்ய குவிந்தனர். கோவில் வளாகத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார், போக்குவரத்தை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.