பதிவு செய்த நாள்
09
ஜன
2013
10:01
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் 22 உண்டியல்களில் 10 லட்சத்து 7 ஆயிரத்து 972 ரூபாய் ரொக்கமும், 102 கிராம் தங்கம், 93 கிராம் வெள்ளியும் 3 மாதத்தில் காணிக்கையாக கிடைத்துள்ளது.நெல்லையப்பர் கோயிலில் 22 இடங்களில் உண்டில்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை 3 மாதத்திற்கு ஒருமுறை திறந்து எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று உண்டியல் திறந்து எண்ணப்பட்டன. தூத்துக்குடி அறநிலையத்துறை உதவிக்கமிஷனர் செல்லத்துரை, நெல்லை அறநிலையத்துறை உதவிக்கமிஷனர் கண்ணதாசன் முன்னிலையில் நெல்லையப்பர் கோயில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. நெல்லையப்பர் கோயில் செயல் அலுவலர் யக்ஞ நாராயணன், ஆய்வர் சுப்பிரமணியன், பேஸ்கார் முருகேசன் மற்றும் கோயில் பணியாளர்கள், மதிதா இந்துக் கல்லூரி பள்ளி என்.எஸ்.எஸ்., ஆசிரியர், ஜூனியர் ரெட்கிராஸ் ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமையில் மாணவர்கள், பக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.இதில் 10 லட்சத்து 7 ஆயிரத்து 972 ரூபாய் ரொக்கம் வசூலானது. மேலும் 102 கிராம் தங்கமும், 93 கிராம் வெள்ளியும், வெளிநாட்டு நாணயங்களும் காணிக்கையாக வசூலாகியுள்ளது. கடந்த முறை 50 நாட்களில் உண்டியல் திறக்கப்பட்டதில் 4 லட்சத்து 59 ஆயிரத்து 257 ரூபாய் இருந்தது. பக்தர்கள் வருகை எண்ணிக்கை அதிகரிப்பால் கூடுதலாக பணம் வசூலாகியுள்ளதாக கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.