தேவகோட்டை; தேவகோட்டை பட்டுக்குருக்கள் நகரில் உள்ள அத்தி வாராஹி அம்மன் கோயிலில் தை மாத பஞ்சமியை முன்னிட்டு வாராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றன. தொடர்ந்து அலங்காரம் பூஜைகள் நடந்தன. உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமானோர் பூஜையில் பங்கேற்றனர். தேவகோட்டை நித்திய கல்யாணிபுரம் சவுபாக்ய துர்க்கை அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள வாராஹி அம்மனுக்கு பஞ்கமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் பூஜைகள் நடந்தன.