திருப்பூர்: திருப்பூர், ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வளாகத்தில் உள்ள, கோசாலையில் காளை, பசு மற்றும் கன்றுகள் என, 11 மாடுகள் பராமரிக்கப்பட்டு வந்தன.
புதிய கோசாலை அமைக்க, அறங்காவலர் குழுவும், கோவில் நிர்வாகமும் முடிவு செய்திருந்தது. பணிகள் நடந்து வந்த போது, அறநிலையத்துறை பொறியாளர்கள், ‘டிசைன்’ மாற்றி அமைக்கும்படி உத்தரவிட்டனர். மறுமதிப்பீடு தயாரித்து ஆறு மாதங்களாக பணி நடந்து வந்தது. இந்நிலையில், 36 லட்சம் ரூபாய் மதிப்பில், பெரிய கோசாலை அமைக்கப்பட்டது. பணிகள் நிறைவுற்று, கோசாலை நேற்று திறக்கப்பட்டது. அதிகாலையில், பட்டாச்சார்யார்கள் சிறப்பு யாகபூஜைகள் நடத்தி, கோசாலைக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். செயல் அலுவலர் வனராஜா கூறுகையில்,‘‘கோசாலை பணியால், மாடுகள் மரநிழல் மற்றும் கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தன. விரைவாக திறப்பு விழா நடத்தி, புதிய கோசாலை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது,’’ என்றார்.