பதிவு செய்த நாள்
10
ஜன
2013
11:01
புதுக்கடை: முன்சிறை திருமலை மகாதேவர் கோயிலில் வரும் 23ம் தேதி கும்பாபஷேகம் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற சிவாலய ஓட்டத்தின் முதல் கோயிலாக முன்சிறை திருமலை மகாதேவர் கோயில் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இக்கோயிலில் கும்பாபஷேகம் நடந்து பல ஆண்டுகள் கடந்தது. இதை தொடர்ந்து முன்சிறை திருமலை மகாதேவர் சிவ பக்தர்கள் சங்கம் கோயிலை புனரமைத்து கும்பாபஷேகம் செய்ய தீர்மானித்தது. தொடர்ந்து பக்தர்களிடம் இருந்து நிதி வ‘ல் செய்து கோயில் பூஜா மண்டபம் கிரானைட் போடுதல், அன்னதான தளம் கான்கிரீட் அமைத்தல், தீர்த்த குளம் தூர்வாரி சீரமைத்தல், மகாவிஷ்ணு கோயில் முன்பக்கம் படித்தளம் அமைத்தல், கோயில் முன் புது சிலைகள் அமைத்தல், பூஜா மண்டபம், கருட மண்டபம், மடப்பள்ளி சீர் செய்தல், கோபுரங்களை சீரமைத்து பஞ்சவர்ணம் பூசுதல், நான்கு புறங்களிலும் இண்டர்லாக் கல்கள் அமைத்தல் உட்பட பணிகள் சுமார் 25 லட்சம் ரூபாய் மதிப்பல் மேற்கொள்ளப்பட்டது. அறநிலையத்துறை சார்பல் ஒயரிங், முன்பக்க மண்டபம் சீரமைத்து ஓடு அமைத்தல், கல்களை ரசாயன கலவையால் சுத்தம் செய்தல் போன்ற பணிகள் நடந்து வருகிறது. கோயில் திருப்பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், கோயில் கும்பாபஷேகம் வரும் 23ம் தேதி நடக்கிறது. விழாவில் காலை கணபதி ஹோமம், யாகசாலை பூஜை, அஷ்டபந்தன கலசம், பகல் 11 மணிக்கு மகா கும்பாபஷேகம் நடக்கிறது. இந்து அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன், வனத்துறை அமைச்சர் பச்சைமால், இந்துசமய அறநிலையத்துறை ஆணையாளர் தனபால் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் முன்சிறை திருமலை மகாதேவர் சிவபக்தர்கள் சங்கத்தினர் செய்துவருகின்றனர்.