பதிவு செய்த நாள்
01
ஜன
2026
01:01
புட்டபர்த்தி; புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அர்ச்சனைகள், ஆரத்தி நடைபெற்றது.
சத்ய சாய்பாபா அவதார புருஷராகவும், ஆன்மிக குருவாகவும் போற்றப்படுகிறவர். இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் தன்னுடைய நிறுவனங்களின் மூலம் எண்ணற்ற இலவசக் கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் மற்றும் தொண்டு நிறுவனங்களின் மூலம் சேவை புரிந்து வந்தார். ஆண்டு முழுதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்று வந்தாலும், புதிய ஆண்டின் துவக்கத்தை சிறப்பு அர்ச்சனைகள், ஆரத்தியுடன் விழா வரவேற்பது வழக்கம். அதன்படி இன்று பிரசாந்தி நிலையத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றது. இன்று (1ம் தேதி) காலை 8.00 மணிக்கு வேத பாரயணத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து மாணவர்களின் பேண்ட் ஆர்கெஸ்ட்ரா, பிரசாந்தி பஜன் குழுவினரின் பக்தி இசை நிகழ்ச்சி, ஸ்ரீ சத்ய சாய் அஷ்டோத்தர ஷத நாமாவளி - சங்கீதம் நடைபெற்றது. தொடர்ந்து பழைய மாணவர்களின் உரை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு பஜனை மற்றும் மங்கள ஆரத்தி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரவச தரிசனம் செய்தனர். தொடர்ந்து மாலை 4:30 மணி வேத பாரயணம், மாலை 4:50 பேண்ட் ஆர்கெஸ்ட்ரா & சிம்பொனி, மாலை 5:30 மணிக்கு சர்வம் தவ அர்ப்பணம் - நாடகம் நடைபெற உள்ளது.