பதிவு செய்த நாள்
11
ஜன
2013
11:01
புதுச்சேரி: ஸ்ரீ ராமானுஜர் பஜனை மடம் கோவிலில், ஆண்டாள் திருக்கல்யாணத்தை முன்னிட்டு நேற்று மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. முருங்கப்பாக்கம் சமரச சன்மார்க்க ஸ்ரீ ராமானுஜர் பஜனை டம் கோவிலில், ஆண்டாள் திருக்கல் யாண உற்சவம் மற்றும் கூடார வல்லி உற்சவம் இன்று நடக்கிறது. விழாவினை முன்னிட்டு நேற்று மாலை 6 மணிக்கு பின்னை மர வாகனத்தில் பஜனையுடன் மாப்பிள்ளை அழைப்பு வீதியுலா நடந்தது. இன்று(11ம் தேதி) காலை 7 மணிக்கு, கண்ணன், ஆண்டாள் நாச்சியார் உற்சவ மூர்த்திகளுக்கு கலசத் திருமஞ்சனம்நடக்கிறது. காலை 9.30 மணிக்கு, சந்துவெளிமாரியம்மன் கோவிலிலிருந்துபள்ளத் தெரு வழியாக, பெண்அழைப்பு நடக்கிறது. இதில் பெண்கள் சீர் தட்டு வரிசையுடன் கலந்து கொள்ளலாம்.பகல், 12.05 மணிக்கு, ஆண்டாள் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு, திருமணக் கோலத்தில் முத்துப்பல்லக்கில் சுவாமி, தாயார் கோதை நாச்சியாருடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.நாளை (12ம் தேதி) மாலை 6.30 மணிக்கு, ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை, கோவில்நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.