திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள்; அக்., 1 மற்றும் 5ம் தேதி வி.ஐ.பி. தரிசனம் ரத்து
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30செப் 2026 01:09
திருப்பதி; திருமலையில் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. புரட்டாசி மாதம் மற்றும் வரவிருக்கும் தொடர் விடுமுறை நாட்களால் கூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதைக் கருத்தில் கொண்டு, திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதன்படி, நாளை அக்டோபர் 1 ம் தேதி மற்றும் அக்டோபர் 5 (திங்கள்) ஆகிய தேதிகளில், நெறிமுறைக்கு உட்பட்ட முக்கியப் பிரமுகர்களை தவிர மற்றவர்களுக்கான வி.ஐ.பி. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தற்போது தினமும் சுமார் 80,000 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். இருப்பினும், அதே நாளில் வந்து தரிசனத்திற்காகக் காத்திருக்கும் சுமார் 30,000 கூடுதல் பக்தர்கள், பெரும்பாலும் மறுநாளே சுவாமி தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதனால் சாதாரண பக்தர்களின் காத்திருப்பு நேரம் அதிகரிக்கிறது. எனவே, அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் விரைவாகச் சுவாமி தரிசனம் செய்வதை உறுதிசெய்யும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்ட தேதிகளுக்கு முந்தைய நாட்களான செப்டம்பர் 30 (புதன்) மற்றும் அக்டோபர் 4 (ஞாயிறு) ஆகிய நாட்களிலும் பரிந்துரைக் கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. கடும் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை பக்தர்கள் கவனத்தில் கொண்டு, முழு ஒத்துழைப்பு தருமாறு திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.