மதுராவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு; கோவர்தன கிரி பிரதட்சணம் செய்து வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மார் 2026 03:03
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.
ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்து ஆரத்தி எடுத்ததுடன், புனிதமான கோவர்தன கிரி பிரதட்சணத்தையும் மேற்கொண்டார். தனது பிரதட்சணத்தின் போது, சர்வதேச வன தினத்தை முன்னிட்டு அவர் ஒரு மரக்கன்றை நட்டார். மேலும், புனிதமான மான்சி கங்கா ஏரியிலும் குடியரசுத் தலைவர் வழிபாடு நடத்தினார். மதுராவில் 7-கோஸ் தொலைவுள்ள கோவர்தன கிரி பிரதட்சணத்தை, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெறும் கால்களில் நடந்து மேற்கொண்டார். இந்தப் புனிதமான பிரதட்சணத்தை மேற்கொண்ட முதல் ஜனாதிபதி இவர் என்பது குறிபிடத்தக்கது.