Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நத்தம் அருகே ஆண்கள் மட்டுமே கலந்து ... மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் கோவில் குண்டம் தேர் திருவிழா துவக்கம் மேட்டுப்பாளையம் மைதானம் மாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணியில் பங்குனி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணியில் பங்குனி பிரம்மோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

25 மார்
2026
11:03

திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நேற்று காலை 10:00 மணி முதல் 12:00 மணிக்குள் பெருமாள் கோயில் முன்புறமுள்ள கொடிமரத்தில் கொடி பட்டம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பின்னர் தர்ப்பைப்புற்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களால் பிணைக்கப்பட்டது. கொடி பட்டம் ஏற்றியவுடன் சிறப்பு தீபாராதனை நடந்தது. சாற்று முறை கோஷ்டி பாராயணம் நடந்தது கோயில் பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள் பாடப்பட்டது. தொடர்ந்து பத்து நாட்களுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. சிம்ம வாகனம், அனுமார் வாகனம், உபய கருட சேவை, புன்னை வாகனம், சேஷ வாகனம், ஹம்ச வாகனம் உள்ளிட்டவைகள் நடக்கிறது. வருகிற மார்ச் 29 அன்று திருக்கல்யாண உற்ஸவமும், ஏப்., 4 (பங்குனி உத்தரம் அன்று) காலை 9:00 மணிக்கு மேல் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க பெரிய தேரோட்டம் நடக்கிறது. ஏப்., 6 அன்று உற்ஸவ சாந்தியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar