பண்ருட்டி, அமிர்தாம்பிகை சமேத சோமநாதசுவாமி கோவில், 700 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோவிலில், கடந்த 27 ஆண்டுகளுக்கு பின் நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதையொட்டி, கடந்த 21 ம்தேதி காலை விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து அடுத்த தினங்களில், யாக சாலை பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நேற்று காலை 5:30 மணிக்கு மங்கல இசை; 4 ம் கால பூஜை, காலை 9:00 மணிக்கு பட்டு வஸ்தர ேஹாமம், மகாபூர்ணாகுதி, 9:15 மணிக்கு யாத்ராதானம், கடம்புறப்பாடாகி காலை 9:45 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு அமிர்தாம்பிகை சமேத சோமநாத சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்; இரவு 9:00 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடு நடந்தது. நகராட்சி துணை சேர்மன் சிவா, முன்னாள் அ.தி.மு.க. செயலர் முருகன், எஸ்.வி., ஜூவல்லர்ஸ் அருள், சதிஷ், தியாகு ஜீவல்லரி கஜபதி, முரளிதங்க மாளிகை முரளிதரன், மீனா ஜீவல்லரி தேவராஜ், பகவதி கேஷ்யூஸ் நரேஷ்சந்த், கவுன்சிலர்கள் சோழன், பானுகோபன், காய்கறிக்கடை சரவணன், வள்ளிவிலாஸ் சரவணன், மனவாசங்கடந்த மாமுனிகள் விழா குழுவினர்கள் மோகன கிருஷ்ணன், சத்தியமூர்த்தி, சக்திவேல், சதிஷ்குமார், மதிவாணன், கருணாகரன், பா.ஜ., வினோத்குமார், கட்டட பொறியாளர் அருள், குமாரசாமி இண்டஸ்ட்ரீஸ் கார்த்திக், வசந்தபவன் ஸ்வீட்ஸ் ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.