Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராம நவமி: அயோத்தி ராமர் கோவிலில் ... ராம நவமி; கும்பகோணம் ராமசாமி கோவிலில் தேரோட்டம் கோலாகலம் ராம நவமி; கும்பகோணம் ராமசாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர் உறுதித் தன்மை கண்டறிய சோதனை ஓட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர் உறுதித் தன்மை கண்டறிய சோதனை ஓட்டம்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
10:03

தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேரின் உறுதித்தன்மை விவகாரத்தில், இன்று தேர் சோதனை ஓட்டம் நடத்தப்படவுள்ளது.


பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், இந்தாண்டு பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த, 23ம் தேதி, துவங்கியது. வரும், 29ம் தேதி, தேரோட்டம் நடக்க உள்ளது. இந்நிலையில், தேரை ஆய்வு செய்த பொதுப்பணித்துறையினர் தேரின் உறுதித்தன்மையில் சந்தேகம் இருப்பதாக, நிலைத்தன்மை சான்றளிக்கவில்லை. இதனால், சப்பரத்தில் சுவாமி திருவீதியுலா நடத்த அறநிலையத்துறையினர் திட்டமிட்டனர். இதற்கு, ஹிந்து அமைப்பினர் மற்றும் பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்றுமுன்தினம் பொதுப்பணித்துறையினர் மீண்டும் ஆய்வு செய்தனர். தேரில் உள்ள குறைகளை கூறி, அதை நிவர்த்தி செய்யுங்கள் அதன்பின், மீண்டும் ஆய்வு செய்து முடிவு தெரிவிப்பதாக கூறினர். இதனையடுத்து, பொதுப்பணித்துறையினர் கூறிய குறைகளை நிவர்த்தி செய்யும் பணி நடந்தது. நேற்று இரவு, பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) செயற்பொறியாளர் செல்வராஜ் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர். மீண்டும், நாளை (இன்று) காலை ஆய்வு செய்து இறுதி முடிவு தெரிவிப்பதாக கூறினர். அப்போது, அங்கிருந்த ஹிந்து அமைப்பினர், பொதுப்பணித்துறை அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டு, தேரோட்டம் நிச்சயம் நடக்க வேண்டும். தேரின் உறுதி தன்மையறிய, நாளை (இன்று) சோதனை ஓட்டம் நடத்த வேண்டும். அதில், தேர் உறுதியாக உள்ளதா என்பது தெரியும் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து, நாளை (இன்று) பகல், 12:00 மணிக்கு சோதனை ஓட்டம் நடத்தப்படும் என அறநிலையத்துறை அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், சிறிது நேரம் கோவில் வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar