Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநவமி: செஞ்சி கோட்டை வீர ... கரி வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோத்ஸவ விழா கொடியேற்றம் கரி வரதராஜ பெருமாள் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிவில் பங்குனி உத்திர பெருவிழா: 63 நாயன்மார்கள் உத்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிவில் பங்குனி உத்திர பெருவிழா: 63 நாயன்மார்கள் உத்சவம்

பதிவு செய்த நாள்

27 மார்
2026
05:03

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பங்குனி உத்திர பெருவிழாவின் ஆறாம் நாளான இன்று, 63 நாயன்மார்கள் திருக் கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளும் உத்சவம் விமரிசையாக நடைபெற்றது.


காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஏகாம்பரநாதர் கோவிலில், ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில், பங்குனி உத்திர கல்யாண பெருவிழா 4 நாட்கள் விமரிசையாக நடந்து வருகிறது. கோவில் கும்பாபிஷேகத் தையொட்டி பாலாலயம் செய் யப்பட்டு, 29 கோடி ரூபாய் செலவில் திருப்பணி நடந்து வந் ததால், கடந்த இரு ஆண்டுகளாக பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழா நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த ஆண்டு டிச., 8ம் தேதி கும்பாபிஷேகம் விமரிசையாக நடந்து முடிந் ததை தொடர்ந்து, நடப்பு ஆண்டுஆண்டுக்கான பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாகடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் விமரிசையாக துவங்கியது. இதில், தினமும், காலை, மாலையில் ஏலவார்குழலி அம் பிகையுடன் பல்வேறு வாகனத் தில் எழுந்தருளும் ஏகாம்பரநாதர் நான்கு ராஜ வீதிகளிலும் உலா வருகிறார்.

அதன்படி முதல் நாள் உத்ச வத்தில் காலையில் பவழக்கால் சப்பரத்திலும், இரவு சிம்ம வாக னத்திலும், இரண்டாம் நாளான மார்ச் 23ம் தேதி காலை சூரிய பிர பையிலும், இரவு சந்திர பிரபையி லும், மூன்றாம் நாள் உத்சவமான கடந்த 24ம் தேதி காலை பூத வாகனத்திலும், இரவு சுவாமி, அம்பிகை சண்டேஸ்வரர் பவழக் கால் சப்பரங்களிலும், விநாயகர் பெருச்சாளி வாகனத்திலும், சுப் ரமணியர் தங்க மயில் வாகனத்தி லும் எழுந்தருளி உலா வந்தனர்.


நான்காம் நாள் உத்சவமான நேற்று முன்தினம் காலை நாக வாகனத்திலும், இரவு வெள்ளி இடப வாகனத்திலும், ஐந் தாம் நாள் உத்சவமான நேற்று காலை வெள்ளி அதிகார நந்தி வாகனத்திலும், இரவு கைலா சபீட வெள்ளி ராவண வாக னத்திலும் ஏகாம்பரநாதர் வீதியுலா வந்தார். ஆறாம் நாள் உத்சவமான இன்று காலை அறுபத்து மூன்று நாயன்மார்கள் உத்சவம் நடைபெற்றது. இதில், சப்பரங்களில் மலர் அலங்காரத்தில் ஏலவார்கு ழலி அம்பிகையுடன், ஏகாம்ப ரநாதர், சண்டிகேஸ்வரர், விநாயகர், முருகப்பெருமான் என, பஞ்சமூர்த்திகளுடன், 63 நாயன்மார்கள் திருக்கூட்டத்துடன் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி நான்கு ராஜவீதிகளிலும் கம்பிர ய் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். உத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சிபுரம் துளுவ வேளாள மர பிள சங்கத்தினர் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar