பதிவு செய்த நாள்
28
மார்
2026
08:03
திருத்தணி; திருத்தணி கல்யாண ராமர் கோவிலில் நேற்று, கொடியேற்றத்துடன் ராம நவமி விழா துவங்கியது. திருத்தணி நகரம் அனு மந்தாபுரம் பகுதியில் சுல்யாண ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா, ஒன்பது நாட்கள் கொண் டாடப்படும். அந்த வகை யில், நடப்பாண்டிற்காக ராமநவமி விழா நேற்று காலை கொடியேற்றத்து டன் துவங்கியது.
தொடர்ந்து, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. நாளை நண்பகல், 11:00 மணிக்கு உற்சவர் ராமர், சீதா தேவிக்கும் திருக்கல் யாண நிகழ்ச்சியும், இரவு உற்சவர் வீதியுலாவும் நடக்கிறது. வரும் 5ம் தேதியுடன் விழா நிறைவுபெறுகிறது. தினமும் காலை -மாலை சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். அதேபோல், திருத் தணி பகுதியில் உள்ள பெருமாள் மற்றும் ராமர் கோவில்களில் ராமநவ மியையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.
ராமன் கோவில்: ராமன்கோவில் ஊராட் சியில் கல்யாண ராமர் கோவில் அமைந்துள்ளது. ராமந இக்கோவிலில் வமி உத்சவ விழா நேற்று துவங்கி வரும் சம் தேதி வரை நடைபெற உள்ளது.நேற்று காலை 7:30 மணி- காலை 9:00 மணிக் குள் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. சீதா கல்யாணம், வரும் ம் தேதி நடைபெறும். ராமர் பட்டாபிஷேகம் வரும் 5ம் தேதி நடைபெறும். வரும் 8ம் தேதி விடையாற்றி விழா உத்சவத்துடன் நிறைவடையும்.
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டி கிராமத் தில் பிரசன்ன ஆஞ்சநேயர் சுவாமி கோவில் அமைந் துள்ளது. ராம நவமியை முன்னிட்டு, நேற்று காலை சீதா, ராம, லட்சுமண அனு மந்த் சுவாமிகளின் உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சுவாமிகளுக்கு சிறப்பு அலங்கார, ஆராதனை நடைபெற்றது. மாலை உற்சவ மூர்த்திகள் வீதியுலா வந்தனர்.