எமனேஸ்வரம் ஜீவாநகர் முருகன் கோயில் பூக்குழி உற்ஸவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஏப் 2026 05:04
பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் ஜீவா நகர் பாலசுப்பிரமணியசுவாமி கோயிலில் 103 வது ஆண்டு பங்குனி உத்திர பூக்குழி விழா நடந்தது
எமனேஸ்வரம் ஆதிநாராயணன் பிள்ளையார் கோயிலில் பக்தர்கள் பால் காவடிகள் மற்றும் வேல் குத்தினர். அங்கிருந்து நயினார்கோவில் ரோடு, ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஊர்வலமாக சென்று கோயிலை அடைந்தனர். அங்கு மதியம் 2:00 மணிக்கு கோயில் முன்பு வளர்க்கப்பட்ட அக்னியில் ஒவ்வொருவராக பூக்குழி இறங்கினர். பின்னர் பால் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகம் நடந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நீர்மோர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.