கடவுள் இருக்கும் இடத்தை கோயில், ஆலயம் என்று குறிப்பிடுகிறோம். கோயிலை கோ+ இல் என்று பிரிப்பர். அரசனின் வீடு என்று பொருள். கடவுளே இந்த உலகின் அரசன். அவன் குடியிருக்கும் இடம் கோயில். ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம். அதேநேரம், எல்லா ஆன்மாக்களும் (உயிர்களுக்கும்) ஆன்மிக உணர்வில் லயிப்பதில்லை. பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.