பெருமாநல்லுார் கோட்டை முனியப்ப சுவாமி பொங்கல் விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஏப் 2026 10:04
பெருமாநல்லுார்: திருப்பூர் ஒன்றியம், தொரவலுாரில் உள்ள கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் திருவிழா கடந்த 23ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இன்று சுவாமி கண் திறப்பு மற்றும் கோவில் புகுதல் நிகழ்ச்சியும், நாளை(7ம் தேதி) அவரபாளையத்தில் இருந்து, சக்தி கரகத்துடன் படைக்கலம் கோவிலுக்கு எடுத்து வருதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. வரும் 8ம் தேதி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு, நேர்த்தி கடனாக கிடா வெட்டி பொங்கலிட்டு, சாமிக்கு படைத்து வழிபடுவர். அன்னதானம் வழங்கப்படுகிறது. 10ம் தேதி மஞ்சள் நீராட்டுதல் மற்றும் மறு பூஜை நிகழ்ச்சி நடைபெறும். விழா ஏற்பாடுகளை தக்கார் சபரீஸ்குமார்உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர்.