Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்பு தவாப் என்றால்...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உண்மையின் சக்தி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஏப்
2026
12:04

ஷெய்க் அப்துல் காதிர் என்ற சிறுவன் ஜீலான் நகரில் வசித்தான். படிப்பில் ஆர்வம் கொண்ட அவன் பாக்தாத் நகருக்கு செல்ல ஆசைப்பட்டான்.

காரணம் அங்கு படித்தவர்கள் பலர் இருந்தனர். அம்மாவிடம் இதைச் சொன்னான். ஆனால் அவரோ வெளியூருக்கு அனுப்ப தயங்கினார். அக்காலத்தில் போக்குவரத்து வசதி இல்லை. நடந்தோ, குதிரை, ஒட்டகத்தில்தான் சென்றாக வேண்டும். வழியில் வரும் திருடர்களையும் சமாளிக்க வேண்டியிருக்கும். அதனால் பெரும்பாலும் ஒட்டகக் கூட்டத்தாருடன் மக்கள் பயணம் செய்தனர். ஒருவழியாக அவனுடைய அம்மா, ஒட்டகக்கூட்டாத்தாருடன் பேசி பாக்தாத் நகருக்கு செல்ல ஏற்பாடு செய்தார்.

புறப்படும் முன் நாற்பது தினார்களை அவனுடைய சட்டையில் வைத்து தைத்துக் கொடுத்தாள். ‘‘காதிர்... உண்மையைப் பேசு. உயிருக்கே ஆபத்து என்றாலும் பொய் சொல்லாதே’’ என்றாள். அவனும் சரி என புறப்பட்டான். சிறிது துாரம் சென்றதும் திருடர்கள் வழிமறித்தனர். திருடன் ஒருவன், ‘‘சிறுவனே.. உன்னிடம் ஏதாவது பணம் உள்ளதா’’ என காதிரிடம் கேட்டான்.

‘‘40 தினார்கள் உள்ளன’’  என்றான். அவன் அணிந்துள்ள எளிய ஆடையைப் பார்த்து விட்டு, ‘‘என்னைப் பார்த்தால் பைத்தியம் போல தெரிகிறதா’’  என கோபப்பட்டான் திருடன். ‘‘இல்லை.. நான் உண்மையைத்தான் சொல்கிறேன். என் ஆடைக்குள் நாற்பது தீனார்கள் வைத்து தைக்கப்பட்டிருக்கின்றன’’ என மீண்டும் சொன்னான் காதிர்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த திருடர்களின் தலைவன், அவனது ஆடையைக் கிழித்தான். உடனே அவை கொட்ட ஆரம்பித்தன. ‘‘ஏண்டா... இவ்வளவு பத்திரமாக வைத்திருந்த பணத்தை, நாங்கள் கேட்டதும் ஏன் சொன்னாய்’’ எனக்கேட்டான். ‘‘எத்தகைய ஆபத்து நேர்ந்தாலும் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என எனது அம்மா கூறியிருக்கிறார். அவரது பேச்சை எப்படி மீற முடியும்’’ என துணிச்சலாக பதிலளித்தான் காதிர்.

இவனது பேச்சைக் கேட்டதும் திருடனின் மனம் குத்தியது. ‘இந்த சிறுவன் உண்மையை பேசுகிறான். ஆனால் நானோ தடிப் பயல்களை வைத்து திருடுகிறேனே’’ என வருந்தினான். கொள்ளையடித்த பொருட்களை எல்லாம் அவர்களிடம் கொடுத்து விட்டு திரும்பினர் திருடர்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
திருஷ்டி போக்கவும், விஷப் பூச்சிகளை தடுக்கவும் ... மேலும்
 
புன்சிரிப்புடன் வரவேற்பது நம் கடமை. ... மேலும்
 

புத்தக புரட்சி ஏப்ரல் 06,2026

தந்தையை இழந்தவன் சிறுவன் ஜேம்ஸ். அவனுக்கு அக்கா, தங்கை, தம்பி என மூன்று சகோதரர் இருந்தனர். பனிரெண்டாம் ... மேலும்
 

ஆர்வமுடன் செய் ஏப்ரல் 06,2026

* எந்த ஒரு வேலையாக இருந்தாலும் ஆர்வமுடன் ஈடுபடு.* செயலின் முக்கியத்துவம் உணர்ந்து செயலாற்று.* ... மேலும்
 

மறக்காதே ஏப்ரல் 06,2026

* கடந்து வந்த பாதையை மறக்காதே.* இயற்கையை நேசிக்க கற்றுக்கொள். * அண்டை வீட்டாரிடம் நட்பு பாராட்டு.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar