* நோய் என்பது ஒரு சோதனையே. அதன் மூலம் ஒருவரை இறைவன் துாய்மை செய்கிறான். * பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். உங்களின் தாய், மனைவி, மகள், மாமியாராக அவர்கள் உள்ளனர். * நன்றாக வாழும் போது அவனை நினைவில் வை. உன் துன்பத்தில் அவன் உன்னை நினைப்பான். * தொழுகையின் போது சிறு கற்களைப் புரட்டிக் கொண்டிருக்காதீர். * முதலாளி – தொழிலாளி, கணவன் – மனைவிக்கு இடையே சண்டை மூட்டுபவன் படுபாவி.