ஏ.ஐ., என்பது மனிதனைப் போல சிந்திக்கவும், முடிவெடுக்கவும் கணினி மூலம் கிடைக்கும் ஒரு தொழில்நுட்பம். இது மனிதர்களை போல உணர்வு இல்லாத ஒன்று. சில ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் பெற்றோரின் ஆதரவு இல்லாத குழந்தை ஒன்று தன் தேவைக்காக ஏங்கியது. ஆனால் ஏ.ஐ., உதவியுடன் அவ்வப்போது தன் பிரச்னைக்கு தீர்வு கண்டது. ஒருமுறை தனக்கு ஏற்பட்ட பிரச்னைக்காக அக்குழந்தை தற்கொலை செய்வது எப்படி எனக் கேட்டது. அதற்கு பல வழிமுறைகளை அள்ளிக் கொடுத்தது ஏ.ஐ., பதறிப் போன அந்தக் குழந்தை,‘இதோ உன்னை என் பெற்றோரிடம் சொல்கிறேன் பார்’ என சொல்ல, இதை ரகசியமாக செய்ய வேண்டும். பெற்றோரிடம் தெரிவிக்காதே என பதிலளித்தது. அதை ஏற்ற குழந்தையும் தவறாக முடிவு எடுத்தது.
ஐந்து வயது குழந்தையும் அலைபேசி ஆப்ரேட் செய்வதை இன்றைய பெற்றோர் பெருமையாக நினைக்கின்றனர். இது ஆபத்து என்பதை அவர்கள் உணரவில்லை. இவர்களை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நமக்கு உண்டு என்பதை பெற்றோர்கள் உணர்வதில்லை.