மானாமதுரையில் சித்திரை திருவிழா; புதுப்பொலிவு பெறும் சுவாமி வாகனங்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2026 03:04
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் வருகிற 21ம் தேதி சித்திரை திருவிழா வருகிற துவங்க உள்ள நிலையில் சுவாமிகள் வீதி உலா செல்லும் வாகனங்கள் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகின்றன.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தான நிர்வாகத்திற்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும். விழா நாட்களின் போது சுவாமிகள் சிம்மம், அன்னம்,கமலம்,குதிரை,யானை,ரிஷபம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மண்டகப்படிகளில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.இந்த வருடத்திற்கான சித்திரை திருவிழா வருகிற 21ம் தேதி காலை 7:25 மணியிலிருந்து 9:00 மணிக்குள் கொடியேற்றத்துடன் துவங்கவுள்ள நிலையில் சுவாமிகள் வீதி உலா செல்லும் வாகனங்கள் கடந்த சில நாட்களாக சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகிறது.மேலும் 70 வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தேரோட்டத்தன்று 2 தேர்கள் ஓட உள்ள நிலையில் தேர்களும் சீரமைக்கப்பட்டு வருகிறது.விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 28ம் தேதி காலை 10:35 மணியிலிருந்து 11:00 மணிக்குள்ளும்,வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா மே.1ம் தேதியும் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான நிர்வாகிகள், அர்ச்சகர்கள்,பொதுமக்கள்,பக்தர்கள் செய்து வருகின்றனர்.