Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  தமிழ் வருட பஞ்சாங்கம் கவர்னர் ... தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் ஆண்டு விழா தர்மசாஸ்தா ஐயப்பன் கோவில் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா மவுலீதுடன் துவக்கம் ஏப்.28ல் கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா மவுலீதுடன் துவக்கம் ஏப்.28ல் கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

19 ஏப்
2026
09:04

கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் அல் குத்புல் சுல்தான் செய்யது இப்ராகிம் பாதுஷா நாயகம் தர்காவில் 852ம் ஆண்டு உரூஸ் என்னும் மத நல்லிணக்க சந்தனக்கூடு விழா மே 10ல் நடக்கும் நிலையில் மவுலீது ஓதுவதுடன் துவங்கியது.

நேற்று மாலை 6:30 மணி முதல் சிறப்பு துவா ஓதப்பட்டது. பின் உலக நன்மைக்கான மவுலீது (புகழ் மாலை) துவங்கியது. மாவட்ட அரசு காஜி சலாஹுதீன் ஆலீம் முன்னிலையில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மவுலீது முதல் நாளை முன்னிட்டு புனித மக்பராவில் சந்தனம் பூசப்பட்டு மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவு 11:30 மணி வரை தொடர்ந்து ஓதப்பட்டது.

பேரிச்சம்பழம், பிஸ்கட், பழ வகைகள் தட்டுகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டது. பிரார்த்தனையில் பங்கேற்றவர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான யாத்ரீகர்கள் ஏர்வாடி தர்காவிற்கு வருகின்றனர்.

ஏப்., 28ல் சந்தனக்கூடு விழா கொடியேற்றம் நடக்கிறது.

மே 10 மாலை முதல் சந்தனக்கூடு திருவிழாவிற்கான நிகழ்வுகள் துவங்கி மறுநாள் அதிகாலை புனித மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடக்கிறது.

ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் அகமது இப்ராகிம், துணைத் தலைவர் முஹம்மது சுல்தான், செயலாளர் ஜாகிர் உசேன் மற்றும் தர்கா நிர்வாக சபை உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
நவராத்திரி என்பது பெண் தெய்வங்களுக்குரிய பண்டிகை போலவும், பெண்கள் மட்டுமே இந்த விரதத்தை அனுஷ்டிக்க ... மேலும்
 
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar