Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராம்போலா பிரச்னைக்கு முடிவு
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கோஹிந்தா... கோபாலா...
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
01:04

மகாவிஷ்ணுவின் திருநாமங்களில் கோவிந்த நாமம் புனிதமானது. கோவிந்தா என அழைத்த திரவுபதியின் மானம் காக்க ஓடோடி வந்தார் கிருஷ்ணர். திருப்பதியில் எங்கும் கேட்பது கோவிந்த நாமம் தான்.
ஒருநாள் ஏழுமலையானை தரிசிக்க வந்த பெரியவர் ஒருவர் அங்குள்ள குளத்தில் நீராட வந்தார். அப்போது முடிகாணிக்கை செலுத்திய ஒருவர் நீராட குளத்திற்குள் மூழ்கி எழுந்தபடி, ‘கோஹிந்தா! கோபாலா!’  என சப்தமாகச் சொல்லி வணங்கினார். ‘கோவிந்தா’  என்றே சொல்ல வேண்டும் என தடுக்க வாயெடுத்தார் பெரியவர். அதற்குள் பக்தர் உரத்த குரலில், ‘‘அப்பனே! கோஹிந்தா! வருடந்தோறும் முடிக் காணிக்கை செலுத்தறதா சொன்னது போலவே, இந்த வருஷமும் செலுத்திட்டேன். கடந்த காலம் போலவே, இப்போதும் சந்தோஷமா வாழ அருள் புரியணும்’’ என்றார்.  உடனே பெரியவருக்குள் சிந்தனை எழுந்தது.
‘போன வருஷமும் ‘கோஹிந்தா! கோபாலா! என்று தானே இவர் அழைத்திருப்பார்.
 அதற்கு ஏழுமலையான் ஒன்றும் கோபப்படவில்லையே! போன வருஷம் போலவே, இந்த வருஷமும் அருள் செய்யணும் என்று தானே இவர் வேண்டிக் கொண்டார்! குழந்தையின் மழலை கேட்டு மகிழும் தாய் போல, தவறான உச்சரிப்பு கூட கடவுளுக்கு சந்தோஷம் தரும் போலும்’ என்ற முடிவுக்கு வந்தார். ஏழுமலையானின் கருணையை என்னவென்று சொல்வது?

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உங்கள் சாய்ஸ் ஏப்ரல் 20,2026

சிறுவன் நரேந்திரனின் மனதில் இரண்டு விதமான சிந்தனை அடிக்கடி தோன்றும். ஒன்று பெரிய வேலையில் சேர்ந்து ... மேலும்
 
மனம் என்னும் பாம்பு மனிதனை ஆட்டி வைக்கிறது. அதை அடக்கும் விதத்தை விளக்கிய சித்தர் பாம்பாட்டிச் ... மேலும்
 
சாகாவரம் பெற்ற தானகாசுரன் தேவர்களைத் துன்புறுத்தினான். அசுரனை அழித்து, தேவர்களைக் காக்கும் பொறுப்பை ... மேலும்
 

யார் திருடன் ஏப்ரல் 20,2026

மன்னரான குலசேகரர் தினமும் அடியார்களுடன் சேர்ந்து ராம பிரானை வழிபட்டார். இதை விரும்பாத மந்திரி, ... மேலும்
 
வாழ்வில் பிரச்னையால் தவித்தான் இளைஞன் ஒருவன். ஞானி ஒருவரைச் சந்தித்து, ‘‘சுவாமி! என் வாழ்வில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar