Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ... அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை வசந்த பிரம்மோற்சவம்: பந்தக்கால் நடும் விழா அருணாசலேஸ்வரர் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.19 லட்சத்தில் புதிய மரக்கதவு திறப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.19 லட்சத்தில் புதிய மரக்கதவு திறப்பு

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
06:04

சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் பொருத்தப்பட்ட புதிய மரக்கதவு, இன்று சிறப்பு யாகசாலை பூஜை செய்து திறக்கப்பட்டது.


சேலம் நகரின் மையத்தில் அமைந்துள்ள, எட்டுப்பட்டி மாரியம்மன்களின் முதன்மையாக உள்ள, கோட்டை மாரியம்மன் கோவிலில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உள்ள, பழைய கதவு பழுது ஏற்பட்டு திறந்து மூடுவதில் பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, புதிய மரக்கதவு செய்யும் பணி உபயதாரர் மூலம் கடந்தாண்டு துவங்கியது. உறுதியான தேக்கு மற்றும் ஈட்டி மரத்தால், 17 அடி உயரம், 8 அடி அகலத்தில் இரு கதவுகளிலும் 78 பூ வேலைப்பாடுகளுடன், 19 லட்சம் ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக தயார் செய்யப்பட்ட புதிய மரக்கதவு, கிரேன் இயந்திரம் உதவியுடன் எடுத்து வரப்பட்டு, கடந்த மாதம் பொருத்தப்பட்டது. இதன் திறப்பு விழா, அட்சய திருதியையான இன்று திறக்கப்பட்டு, அம்மன் பிரவேசம் நடந்தது. இதனையொட்டி இன்று காலை, 5:00 முதல் 7:00 மணி வரை சிறப்பு யாகபூஜை மகா பூர்ணாஹூதியுடன் நடத்தப்பட்டது. அதில் வைக்கப்பட்டிருந்த புனித நீரை, புதிய கதவுக்கு தெளித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. அப்போது கோவிலில் திரண்டிருந்த பக்தர்கள், ‘ஓம்சக்தி பராசக்தி’ என கோஷம் முழங்க கதவு திறக்கப்பட்டு, முதலில் கோமாதாவும், அதை தொடர்ந்து தங்க கவசத்தில் எழுந்தருளிய உற்சவர் அம்மன் பிரவேசமும் நடந்தது. இந்நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அனில்குமார் கிரி, அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இரவு, 7:00 மணிக்கு தங்கத்தேர் புறப்பாடு நடந்தது. பின்னர், பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி உள்ளிட்ட அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar