திருச்சூர் பூரம் திருவிழா பாரமேக்காவு பகவதி கோவிலில் கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2026 03:04
பாலக்காடு: திருச்சூர் பூரம் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
கேரளாவின் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா எல்லா ஆண்டும் சித்திரை மாதம் நடப்பது வழக்கம். நடப்பாண்டு பூரம் திருவிழா வரும் 26ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் விழாவிற்கு நேற்று பாரம்பரிய கொடியேற்றத்துடன் கோலாலமாக தொடங்கியது. பாரமேக்காவு பகவதி அம்மன் கோவில் மற்றும் திருவம்பாடி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் ஆகிய இரு முக்கிய கோவில்கள் உட்பட, விழாவில் பங்கேற்கும் எட்டு கோவில்களில் நேற்று குடிகள் ஏற்றப்பட்டு விழா துவங்கியது. ஏப். 24ம் யானை அலங்காரப் பொருட்கள் கண்காட்சி மற்றும் இரவு மாதிரி வான வேடிக்கை நடைபெறும். ஏப். 25ம் தேதி நெய்தலக்காவு பகவதி அம்மன் வடக்குநாதன் கோவிலுக்கு வந்து, தெற்கு கோபுர நடை வழியாகப் பூரம் தொடக்கத்தை அறிவிக்கப்படும் நிகழ்வு நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான ஏப். 26ம் தேதி மடத்தில் வரவு பஞ்சவாத்யம், இலஞ்சிறைத்தரை மேளம், 30 யானைகள் அணிவகுத்து நின்று, வண்ணமயமான குடைமாற்றம் மற்றும் முக்கிய வானவேடிக்கை நடைபெறும். ஏப். 27ம் தேதி விழா நிறைவு பெறுகிறது.