Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சங்கரமடத்தில் நுாற்றாண்டு குரு பூஜை செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புவனத்தில் சித்திரை திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
06:04

திருப்புவனம்: தென் மாவட்ட மக்களின் முக்கிய திருவிழாவான சித்திரை திருவிழா மதுரையில் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது . மதுரை அழகர்கோயிலில் இருந்து கள்ளழகர் வேடம் பூண்டு மதுரையில் சகோதரி திருமணத்தை காண வரும் அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு தொன்று தொட்டு நடந்து வருகிறது. இந்தாண்டு மே 1ம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்க உள்ளார். அழகர்கோயிலில் இருந்து சீர்பாதம் தாங்கிகள் என அழைக்கப்படும் குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அழகரை சுமந்து வருவார்கள், இதற்காக விரதம் இருந்து அழகரை தூக்கி வருவது வழக்கம், இதில் குறிப்பிட்ட சதவிகிதம் பேர் திருப்புவனத்திலும் வசிக்கின்றனர். வருடம் தோறும் அழகரை சுமக்க இவர்கள் செல்வர்கள். இவர்கள் முன்கூட்டியே திருப்புவனத்தில் சித்திரை திருவிழா கொண்டாடியே பின்னரே அழகரை சுமக்க செல்வார்கள்.


இவர்களை பார்த்து திருப்புவனம் பகுதி சிறுவர்களும் தங்கள் சேமிப்பில் இருந்து சித்திரை திருவிழா கொண்டாடுகின்றனர். இதற்காக தங்கப்பல்லக்கில் கள்ளழகர் வருவது, வழிநெடுகிலும் பக்தர்கள் வரவேற்பது, பின் வைகை ஆற்றில் எழுந்தருள்வது என அனைத்து நிகழ்வுகளையும் வரிசை மாறாமல் செய்கின்றனர். அழகரை சுமந்து நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக சென்று வைகை ஆற்றில் இறங்கினர் .


பொதுமக்கள் கூறுகையில்: இளையதலைமுறையினர் வசம் திருவிழாக்கள் பற்றிய எதிர்பார்ப்பு, ஆர்வங்கள் குறைந்து விட்டாலும் சித்திரை திருவிழா மட்டும் குறைவதே இல்லை. ஒவ்வொரு வருடமும் அழகரை காண வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இதற்கு சாட்சியாகும், திருப்புவனத்தைச் சேர்ந்த சிறுவர்கள் தங்கள் சேமிப்பு பணத்தில் இருந்து சித்திரை திருவிழாவை நடத்தி வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar