Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி கோட்டை கமலக்கண்ணியம்மன் ... சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் ஜெயந்தி விழா கோலாகலம் சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏனாத்தூரில் ஆதிசங்கரர் ஜெயந்தி மகோத்சவம்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுக்ரஹ பாஷணம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஏனாத்தூரில் ஆதிசங்கரர் ஜெயந்தி மகோத்சவம்: விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அனுக்ரஹ பாஷணம்

பதிவு செய்த நாள்

21 ஏப்
2026
10:04

காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா இங்கு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று ஆதிசங்கரர் ஜெயந்தி மகோத்சவம் சிறப்பாக நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவில் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று பக்தர்களுக்கு அனுக்ரஹ பாஷணம் செய்தார்.


விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் கூறியதாவது: இன்றைய தினம் முக்தி தரும் நகரேழில் காஞ்சி மாநகரத்தில் பல இடங்களில் ஆதிசங்கரின் ஜெயந்தி உத்சவம் விமர்சையாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது. காஞ்சிமடத்தின் சார்பாக பல இடங்களில், கிளைகள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் கன்னியாகுமரி துவங்கி, கன்னியாகுமரி கடற்கரையிலே நம்முடைய பெரியவர்கள் முயற்சியினால் அழகான ஆதிசங்கரருக்கு மண்டபம் கட்டப்பட்டு அங்கு தொடங்கி காஷ்மீரம் வரை சங்கராசர்யர் ஹில் வரையில். அங்கு கடற்கரையிலே பகவதி அம்மன் கோயில் பக்கத்திலேயே ஆதி சங்கரருக்கு தட்சணாமூர்த்திக்கு ஒரு நல்ல சன்னதி அமைக்கப்பட்டு தோரணம் அமைக்கப்பட்டு அங்கும் சங்கர ஜெயந்தி உத்சவ விழா காலடியில் நடைபெறுகிறது. 


பல ஊர்களிலேயும் நடைபெறுகிறது. பஞ்சாபில் மூன்று வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்த வருடமும் பஞ்சாபில் அமிர்தசரசில் ஹோமங்களும், பாராயணங்களும், உத்சவங்களும் நடை பெற்று வருகின்றன. காஷ்மீரில் சங்கராசார்யா ஹில் என்று சொல்லக்கூடிய அந்த ஸ்ரீநகரில் தொடர்ந்தார்போல் பல வருடங்களாக நடைபெற்று வருகின்றன. ரிக், யஜூர், சாம, அதர்வண வேதபாராயணங்கள் என்று சுழற்சி முறையில் வருடாவருடம் ஒரு வேதபாராயணம் விசேஷமான முறையில் நடத்தபட்டு வருகிறது. இந்த வருடமும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அக்னி ஹோத்ரி மூலமாக கச்சேரிக்கள், பஜனைகள், சுகாசினி பூஜைகள், அங்கு இருக்கக்கூடிய காஷ்மீர் பண்டிட் குடும்பத்தை சார்ந்த சுகாசினிகளை வரவழைத்து அங்கு சுகாசினி அச்சன பீரீதா என்ற அம்பாளுக்கான பூஜை அங்கு நடைபெற்று வருகிறது. அம்பாள் சம்பந்த பட்ட பூஜைகள் எல்லாம் நடைபெற்று சில வருடங்களுக்கு முன்பாக நம்முடைய ஸ்ரீஸ்ரீஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அங்கு நேராக சென்று சங்கராச்சார்யார் ஹில்லுக்கும் சென்று அங்கு இருக்கக்கூடிய சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து சங்கராச்சார்யர் ஜென்மோத்சவத்தை கொண்டாடினார்கள்.  


1997ம் வருடம் சந்திரமெளலீஸ்வரர் சுவாமி பூஜையுடன் அங்கு இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீரத்திலே பல்வேறு இடங்களிலே பூஜை ஏற்பாடு செய்யப்பட்டு ஸ்ரீநகரிலே அபிஷேகத்திற்கான பால், வில்வம் போன்றவற்றிற்கு ஏற்பாடு செய்து, அங்கு தேசபாதுகாப்புக்காக, இரவு, பகலாக சேவை செய்து கொண்டிருக்கக்கூடிய தினமும் சிவராத்திரியை அனுசரித்துக் கொண்டிருக்கும் நமது தேச பாதுகாப்பு சேனைகளுக்கும் சந்திரமெளலி சுவாமியின் பிரசாதங்கள் கிடைக்க செய்தார். 1997ம் வருடம் பெரியர்களுடன் சேர்ந்து எனக்கும் காஷ்மீரத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. அதை தொடர்ந்து விஸ்வ சாந்தி யக்ஞம் என்பதான காஷ்மீர் தொடர்பான கலாசார பாரம்பர்யத்தை நாம் மறுபடியும் புதுப்பிக்கக்கூடிய விதத்திலே அவர்களுடைய கலாசார புத்தங்களை மறுபதிப்பு செய்து வெளியிடுவது, அங்கே 105 வயதுடைய காஷிநாத் தண்டு என்கிற காஷ்மீர அறிஞரை கெளரவிக்கும் விதமாக நம்முடைய ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்கள் ஜம்முக்கு சென்று அவர்களுக்கு பாராட்டினை ஆசிகளை தெரிவித்தார்கள். அவர் 1950 களிலே அமர்நாத் யாத்திரை சம்பந்தமான ஒரு சமஸ்கிருத புத்தகத்தை வேறு ஒரு அறிஞருடன் இணைந்து பதிப்பித்து இருக்கிறார். அந்த காஷ்மீர் பண்டிதர்களின் கிருக கர்மாக்கள், ஸ்மார்த்த பிரயோகம் எப்படி இருக்கிறதோ அதுபடி பதிப்பிக்கப்பட்டது. அவர்களுடைய லெளகாக்ஷி யக்ஞ சூத்திரம் என்கிற புத்தகமும் திருப்பதி தேவஸ்தானம் சார்பாக நடைபெறும் வேதிக் யுனிவர்சிடியின் துணை கொண்டு பதிப்பிக்கப்பட்டது. தற்போது அந்த முனிவர்கள் காஷ்மீர் பண்டிதர்களுடைய காஷ்மீர் இந்துக்களுடைய ஆன்மிக முன்னேற்றத்துக்கு வழிகாட்டிய, அவர்களுக்கு ஆன்மிகத்தை போதித்த பிறப்பத்திலிருந்து ஆரம்பித்து வாழ்நாள் முழுவதும் நாம் செய்யக்கூடிய பல்வேறு தார்மீகமான சம்ஸ்காரங்களை பற்றிய விவரங்களை நமக்கு அளித்த லெளகாக்ஷி முனிவர் மற்றும் கோகில முனிவருடைய திரு உருவச்சிலைகள் தயார் செய்யப்பட்டு தற்போது டில்லியிலே வைக்கப்பட்டுள்ளது. 


சரியான தருணம் வரும்போது அதை பொறுத்தமான இடத்திலே காஷ்மீரிலே ஸ்தாபிதம் செய்யப்படும். அந்த முனிவர்களின் வழியிலே நம்முடைய பக்தி மார்கத்தை, கர்ம மார்க்கத்தை, தியான மார்கத்தை பின்பற்றி பல்வேறு இயற்கை பேரிடர் மத்தியிலேயும், சீதோஷ்ண மாறுதல் ஏற்பட்ட நிலையிலேயும் பல்வேறு இன்னல்கள் வந்த நிலையிலேயும் நம்முடைய வைதீக சனாதன இந்து தர்மத்தை பின்பற்றி காப்பாற்றி வந்திருக்கிறார்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பது அமைதி நிரம்பி இருக்கக்கூடிய பகுதியிலே வசிக்கக்கூடிய மக்கள் கவனத்திலே கொள்ள வேண்டிய ஒரு விஷயம். காஷ்மீர் இந்துக்களுக்கு நாம் உறுதுணையாக இருந்து அவர்களுக்கு கலாசார அடையாளத்தை அவர்கள் வாழ்க்கையிலே பின்பற்றுவதற்கு தேவையான உதவிகளையும் உற்சாகத்தையும் அளித்து அந்த கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீரம் வரையிலான நம்முடைய வைதீகம்,  கலாசாரம், நாகரீகம் மேலும் வழிபடுவதற்கு அனைவரும் இணைந்து பணிசெய்ய வேண்டிய தருணமாக இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் இருக்கக்கூடிய பூர்வோத்தர பிரதேசங்கள் நம்முடைய பெரியவர்கள் லால்பட்டி விநாயகர் கோவிலியே 1980களிலே நம்முடைய ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன் அங்கு சென்று பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகத்தை நிகழ்த்தினார். பெரியவர்களின் என்ன உபதேசம் இருக்கிறதோ அதே போல் நடந்து கொள்ள வேண்டும். தர்ம வழியிலே நம்முடைய வாழ்க்கை பயணம் தொடர வேண்டும். பிறவி அற்ற ஞானம் என்ற நிலையை நாம் அனைவருக்கும் அடையவதற்கும் இந்த கீதா பாராயணத்தை செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்பியதை இன்றைக்கு வெளிநாட்டிலேயும் சரி உள் நாட்டிலேயும் சரி பல ஆஸ்ரமத்தை சார்ந்தவர்கள் அந்த கீதா பாராயணத்தை நடத்தி கொண்டு வருகிறார்கள் என்றால் அந்த பகவத் பாதருடைய அந்த வேண்டுகோள், விருப்பம் செயல் வடிவம் பெற்று இன்றைக்கு அவர்களுக்கு ஒரு திருப்தியை அளிக்கக்கூடிய விதத்திலே ஆன்மீக மேம்பாட்டு வழியிலே சமுதாயம் சென்று கொண்டு இருக்கிறது. ஆகவே இந்த சகஸ்ரநாம பாராயணம், கீதா பாராயணம், கங்கா ஸ்நானம் ஆகியவை நம்முடைய நாடு நலம் பெற வேண்டும், நல்லவர்களாக வாழ வேண்டும். நல்லவர்களாக இருப்பவர்களுக்கு பாதுகாப்பு, வளர்ச்சியும் ஏற்பட வேண்டும். இந்த தேசம் ஒற்றுமையாக இருந்து உலக அமைதிக்காக இது வலுவான தேசமாக இருந்து அமைதியை போதிக்கக்கூடிய இவர்கள் செய்யக்கூடிய போதனைகளை உலகம் ஏற்று உலகமும் அந்த வழியிலே செல்வதற்கு நம்முடைய நாடு வலுவானதாக இருக்க வேண்டியது அவசியம். வலுவானதாக நாடு அமைவதற்கு ஒவ்வொரு தனி மனிதனும் நல்லவர்களாகவும் விவேகமுடையவர்களாகவும், புத்திமான்களாகவும், உழைப்பாளிகளாகவும், உதவி செய்யக்கூடியவர்களாகவும், விக்ஞானத்தையும், விஸ்வாசத்தையும் ஏற்றவர்களாகவும் வாழவேண்டிய கட்டாயமான தேவையான ஒன்று ‛அமிர்த்த பிந்து ஆனந்த சிந்து’ ஒவ்வொரு தனிமனிதனுடைய பங்களிப்பும், நிர்மாணிப்பதிலே நாட்டினுடைய வளர்ச்சியிலே அது முக்கிய பங்காற்றியது. ஆகவே சிறுதொழில் பெருவெள்ளம் என்பது போன்று ஒவ்வொரு மனிதர்களும் அந்த தர்ம சாஸ்திரத்தின் படி நடந்து பக்தி வழியிலே நடந்து சேவா மார்க்கத்திலே இருந்து உழைப்பும், உதவக்கூடிய பண்புகளும் நிறைந்து நம்முடைய நாடு மேன்மேலும் வளம்பெறுவதற்கு 8 வயதிலிருந்து 32 வயது வரை 24 ஆண்டு காலம் பாதையாத்திரையாக சென்று பலமுறை இந்த பாரத பூமியை வலம்வந்து தர்மத்தையும், பக்தியையும் சேவை மனப்பாண்மையையும் பரப்பினார். அவர் வழியில் நாமும் நடப்போம். அனைவருக்கும் ஆரோக்கியம் கிடைப்பதற்கு ஸ்ரீசக்கரம் பொறுத்திய காமாட்சியையும் பெரியவர்களையும் பாரார்த்திக்கிறோம். இவ்வாறு சிறப்புறையாற்றினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar