காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் 2535வது சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்: பீடாதிபதிகள் பங்கேற்று வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2026 12:04
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ஸ்ரீசக்ரத்தை பிரதிஷ்டை செய்தவர் ஆதி சங்கரர். இன்று காஞ்சிபுரம் காஞ்சி ஸ்ரீமடத்தில் 2535வது சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு, இன்று வேதபாராயணம், உஷேக அபிசேக, விசேஷ பாராயணம், விசேஷ பாராயணம், விசேஷ பாராயணம் நடைபெற்றது. கடந்த 17ம் தேதி முதல் இன்று 21ம் தேதி வரை பாஷ்ய பாராயணம் மற்றும் ஸ்ரீ ஆச்சாரியாள் புறப்பாடு நடைபெற்றது. இன்று பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிஜி மற்றும் பூஜ்யஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகள் பங்கேற்று சிறப்பு பூஜைகள், புஷ்பாபிஷேகம் செய்தனர். தங்க கவச அங்காரத்தில் ஆதி சங்கர பாகவதபாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.