Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரையில் 70 வருடங்களுக்குப் ... திருப்புல்லாணியில் சைத்ரோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம் திருப்புல்லாணியில் சைத்ரோத்ஸவ விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அந்திகார நந்தி வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த சென்னை காரணீஸ்வரர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அந்திகார நந்தி வாகனத்தில் வலம் வந்து அருள்பாலித்த சென்னை காரணீஸ்வரர்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2026
04:04

சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான நேற்று, அதிகார நந்தி சேவை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

அதிகார நந்தி என்பது சிவாலயங்களில் காணப்படும் ஐந்து வகை நந்திகளில் மூன்றாவது. கைலாயத்தில் சிவனை தரிசிப்பவர்களுக்கு, அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவர் என்பதால், அதிகார நந்தி என பெயர் வந்தது. சிவன் கோவில்களில் அதிகார நந்திக்கென தனி வாகனம் உண்டு.

திருவிழா காலங்களில் சிவபெருமான், இந்த அதிகார நந்தி வாகனத்தில் வீதியுலா வருகிறார். அதிகார நந்தி சேவையை தரிசிக்கும் பக்தர்கள், கைலாசத்தில் சிவ தரிசனம் செய்வதற்கு சமமானது என்பது ஐதீகம்.

சைதாப்பேட்டை, காரணீஸ்வரர் கோவில், சித்திரைப் பெருவிழா, 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் மூன்றாம் நாளான நேற்று, அதிகார நந்தி சேவை நடந்தது.

காலை 5:45 மணிக்கு, அதிகார நந்தி வாகனத்தில் எழுந்தருளிய உற்சவர் காரணீஸ்வரர் கோபுர தரிசனம் தந்தார். பின், நான்கு மாட வீதிகளை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருடன், மயில்வாகனத்தில் முருக பெருமானும், அன்ன வாகனத்தில் அம்பாளும் வலம் வந்தனர்.

நாளை மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேகம் நடக்கிறது. நள்ளிரவு 12:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு நடக்கிறது. விழாவின் முக்கிய நாளான வரும், 27ம் தேதி காலை 7:00 மணிக்கு தேர் திருவிழா நடக்கிறது.

அன்று இரவு 9:00 மணிக்கு சுவாமி சிறப்பு புஷ்ப அலங்காரத்துடன் தேரில் இருந்து கோவிலுக்கு எழுந்தருள்கிறார். வரும், 28ம் தேதி மாலை புஷ்ப விமானத்தில், அறுபத்து மூன்று நாயன்மார்களுக்கு சுவாமி திருக்காட்சி அளிக்கிறார்.

வரும், 29ம் தேதி இரவு பிச்சாடனார் கோலத்தில் திருவீதி உலா நடக்கிறது. திருக்கல்யாண உற்சவம், 30ம் தேதி நடக்கிறது. அன்று இரவு கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. அடுத்த நாள் புஷ்ப பல்லக்கு சேவை நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar