மானாமதுரை சித்திரை திருவிழாவில் நாளை 28ம் தேதி திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஏப் 2026 11:04
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நாளை 28ம் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் உருவாகத்துக்குட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி சோமநாதர் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த 21ஆம் தேதி துவங்கியது. இதனைத் தொடர்ந்து தினம் தோறும் அம்மனும் சுவாமியும், சிம்மம், அன்னம்,கமலம்,கிளி,யானை, குதிரை,பூப்ப பல்லாக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகின்றனர்.முக்கிய நிகழ்ச்சியான சமணர்கள் கழுவேற்றம் நிகழ்ச்சி நேற்று தெற்கு ரத வீதியில் உள்ள பொட்டலில் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து நாளை 28ம் தேதி திருக்கல்யாணமும், 29ம் தேதி தேரோட்டமும் நடைபெற உள்ளது. மே.1ம் தேதி சித்திரை திருவிழாவின் முத்திரை பதிக்கும் விழாவான வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை தேவஸ்தான நிர்வாகிகள் அர்ச்சகர்கள் பக்தர்கள் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.