Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாகபூண்டி நகேஸ்வரர் கோவிலில் தேர் ... வாசவி அம்மன் ஜெயந்தி விழா சங்காபிஷேகத்துடன் துவக்கம் வாசவி அம்மன் ஜெயந்தி விழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை கோவில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வால்பாறை கோவில்களில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

27 ஏப்
2026
04:04

வால்பாறை: வால்பாறையில் உள்ள பல்வேறு கோவில்களில், சித்திரை மாத திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.


வால்பாறை அடுத்துள்ளது ரொட்டிக்கடை முனீஸ்வரன், நாகாத்தாள், மாரியம்மன், கருப்பண்ணசுவாமி கோவிலின், 47ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் வரும், 30ம் தேதி காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 7:00 மணிக்கு அபிஷேக பூஜையும், சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு விநாயர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். இரவு, 8:00 மணிக்கு சக்தி கும்பம் எடுத்தல் நடக்கிறது.


வரும் மே 1ம் தேதி காலை, 7:00 மணிக்கு சக்தி விநாயர் கோவிலில் இருந்து பக்தர்கள் அலகுபூட்டி, முளைப்பாரி, பூவோடு எடுத்தும், அம்மனுக்கு சீர்வரிசை எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். காலை, 10:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. மதுரைவீரன் கோவில் வால்பாறை நகர் கக்கன்காலனி மதுரைவீரன், தொட்டிமுனி திருக்கோவிலின், 76ம் ஆண்டு திருவிழா கடந்த, 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாளை மாலை, 4:00 மணிக்கு பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித தீர்த்தம், கோவிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்படுகிறது. இரவு 8:30 மணிக்கு நல்லகாத்து ஆற்றிலிருந்து சக்தி கும்பம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக செல்கின்றனர். 29ம் தேதி காலை, 9:30 மணிக்கு மதுரைவீரன், பொம்மியம்மாள், வெள்ளையம்மாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழா நடக்கிறது.


பிடாரியம்மன் கோவில் நடுமலை பிடாரியம்மன் கோவிலின், மூன்றாம் ஆண்டு திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேறறத்துடன் துவங்கியது. வரும், 30ம் தேதி  காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அதனை தொடர்ந்து சிறப்பு அலங்கார பூஜையும் நடக்கிறது. மாலை, 3:00 மணிக்கு அண்ணாநகர் முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்தக்குடம் எடுத்து, கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர். நள்ளிரவு, 12:00 மணிக்கு பிடாரியம்மனுக்கு சிறப்புபூஜைகள் நடக்கிறது. வரும்  மே 1ம் தேதி காலை, 11:00 மணிக்கு பக்தர்கள் பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அன்று மதியம், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar