குன்றத்துார் திருநாகேஸ்வரர் கோவில் தேர் திருவிழா கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2026 01:04
குன்றத்துார்: குன்றத்துாரில் பழமைவாய்ந்த திருநாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. நவகிரக தலங்களில் இக்கோவில் ராகு தலமாக விளங்குகிறது. இங்கு சித்திரை மாதம் பிரம்மோற்ச விழா கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பூத வாகனம், நாக வாகனம், யானை வாகனம் என தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் விழா நேற்று காலை நடந்தது. இதில், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தளிய சுவாமியை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர்.