பத்ரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29ஏப் 2026 11:04
சிவகாசி: சிவகாசி பத்ரகாளியம்மன் கோயில் சித்திரைப் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அம்பிகை திருவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி புரிந்தார். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் அம்மன் காமதேனு, கைலாச பர்வத, வேதாள, யானை, ரிஷப உள்ளிட்ட வாகனங்களில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். 8 நாள் திருவிழாவான மே 5 ல் பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவர். மறுநாள் கயர் குத்து திருவிழா நடைபெறும். 10 ம் நாள் திருவிழாவான மே 7 ல் தேரோட்டம் நடைபெறும்.