Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேற்குவங்கத்தில் 15 ஆண்டுகளாக ... அக்னி நட்சத்திரம்; சிவாலயங்களில் லிங்க திருமேனிக்கு தாரா அபிஷேகம் அக்னி நட்சத்திரம்; சிவாலயங்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா: விடிய விடிய அக்னி சட்டி ஊர்வலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கம்பம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா: விடிய விடிய அக்னி சட்டி ஊர்வலம்

பதிவு செய்த நாள்

06 மே
2026
10:05

கம்பம்: கம்பம் கவுமாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது. விடிய விடிய அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். இன்று இரவு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.


தேனி மாவட்டத்தில் உள்ள கவுமாரியம்மன் கோயில்களில் பிரசித்தி பெற்றதும், சுயம்புவாக எழுந்தருளியிருப்பதும் வீரபாண்டி மற்றும் கம்பம் கவுமாரியம்மன் கோயில்களாகும். இரு கோயில்களிலும் நடைபெறும் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. கம்பம் கவுமாரியம்மன் கோயிலில் சித்திரை மாதம் 21 நாட்கள் திருவிழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி நடத்துவார்கள். தினமும் பல்வேறு விதமான அலங்காரத்தில் அம்மன் வீதி உலா வருவார். ஏப்., 21 ல் சாட்டுதல், ஏப். 22 ல் கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. மே 12 வரை திருவிழா நடக்கிறது. பக்தர்கள் நேற்று அதிகாலை முதல் அக்னிசட்டி எடுத்து நேர்த்தி கடன் செலுத்த துவங்கினார்கள். விடிய விடிய ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தனர். நகரின் அனைத்து வீதிகளில் இருந்தும் மேளதாளங்கள்முழங்க வலம் வந்தனர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், அங்கப் பிரதட்சணம் செய்தல், ஆயிரம் கண் பானை எடுத்தல், அலகு குத்துதல், முளைப் பாரி ஊர்வலம் நடைபெறுகிறது. இன்று இரவு கோடாங்கி வாசகம் கோயில் முன்பு பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள். திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கிராம கமிட்டியினர், ஹிந்து சமய அறநிலைய துறையினர் செய்துள்ளனர். நாளை வேளாளர் சங்கங்களின் சார்பில் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar