Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாலக்காடு முனீஸ்வரர் கோவில் ... தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுது படையல்; வளைகாப்பு விழா தில்லை சிவகாளி அம்மனுக்கு அமுது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா : பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா : பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு

பதிவு செய்த நாள்

10 மே
2026
07:05

திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப்பெருவிழா நான்காம் திருநாளில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நிறைவடைந்து, மே7 ல் கொடியேற்றி, காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா நடந்து வருகிறது. தினசரி இரவில் அம்பாள் சர்வ அலங்காரத்தில் திருக்குளம் வலம் வருகிறார். நேற்று நான்காம் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா நடந்தது. வசந்தப் பெருவிழா குழு சார்பில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், நெய், பால், தேங்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களும், அர்ச்சனை பொருட்களும்  வழங்கப்பட்டன. காலை 8:00 மணி அளவில் கோயில் வளாகத்தில் வரிசையாக  108 பெண்கள் பொங்கலிட்டு பால் பொங்கியதும் குலவையிட்டு அம்மனை வழிபட்டனர். பின்னர்  பொங்கலை அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

நடுநாயகமாக உள்ள பூமாயிஅம்மன் என்றழைக்கப்படும் வைஷ்ணவி உள்ளிட்ட மூலவர் சப்தமாதர்களும்  சந்தனக்காப்பு ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்க சிறப்பு தீபாராதனை நடந்ததது. தொடர்ந்து மாலையில் மூலவர்,உற்ஸவ அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்து, பின்னர் உற்ஸவ அம்மன் புறப்பாடாகி திருக்குளம் வலம் வந்தார். திரளாக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாளை காலையில் பால்குட விழாவும், மே 15ல் இரவில் அம்மன் ரத ஊர்வலமும், மே 16  காலையில் தீர்த்தவாரியும், இரவில் தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி வலம் வருதலும் நடைபெறும். 

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar