Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news துடியலூர் சக்தி மாரியம்மன் சித்திரை ...  திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதித்து பக்தர்கள் நேர்த்திக்கடன்  திருத்தணி திரவுபதியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா; முகூர்த்த கால் பூஜையுடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பொள்ளாச்சி சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா; முகூர்த்த கால் பூஜையுடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

11 மே
2026
05:05

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே,பிரசித்தி பெற்ற சூலக்கல் மாரியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி இன்று காலை, ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம், கோவிலுக்கு எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. 


சிறப்பு பூஜைகளுக்கு பின்,மலரால் அலங்கரித்த மூங்கில, கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது.தொடர்ந்து, கோவில் வளாகத்தில் மூங்கில், மூன்றாக உடைக்கப்பட்டது. முகூர்த்த காய் உடைத்து, உடைக்கப்பட்ட மூங்கில் நவதானியங்கள் உள்ளிட்டவை கட்டி, அம்மனிடம் வைக்கப்பட்டது.  அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில்,புரவிபாளையம்ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், அறங்காவலர் குழு தலைவர் கொற்றவேலு, அறங்காவலர்கள் சுதாகர், பாலசுப்ரமணியம், பழனிசாமி, கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து நாளை காலை, 9:00 மணிக்கு வேல் புறப்பாடு, இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டு விழா நடக்கிறது. வரும், 18ம் தேதி இரவு கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும், 19ம் தேதி இரவு, கம்பம் நாட்டு விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 20ம் தேதி காலை,9:00 மணிக்கு கொடியேற்றம், இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும்; வரும், 21ம் தேதி முதல், 26ம் தேதி வரை தினமும் காலை, மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.27ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. தொடர்ந்து, 28ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 29ம் தேதி மாலை இரண்டாம் நாள் தேர் வடம் பிடித்தல்,30ம் தேதி மாலை, மூன்றாம் நாள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 31ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மஹா அபி ேஷகமும் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
குழந்தைகள் மற்றும் குடும்பத்தின் நலனுக்கான மிக சிறந்த விரதம் கார்த்திகை விரதம். முருகனை வளர்த்த ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழகத்தில் உள்ள பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான கோவில்களின், ஆகம அடையாளத்தையே சிதைக்கும் ... மேலும்
 
temple news
மதுரை: சோழவந்தான் அருகே மேலக்கால் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழாவில் பால்குடம், பறவை காவடி, ... மேலும்
 
temple news
 கோவை: கோட்டைமேடு பகுதியிலுள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் கோட்டை சங்கமேஸ்வரர் கோவிலில், இன்று உலக நன்மை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar