Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தைப்பூச விழா: காவடி ஏந்தி ... இன்றைய சிறப்பு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கல்யாண உற்சவம் திரளான பக்தர் தரிசனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 ஜன
2013
10:01

பாபநாசம்: புரசகுடி சிவன்கோவிலில் பிரம்மா, சரஸ்வதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே புரசகுடி கிராமத்தில் முதல் முறையாக பிரம்மாவுக்கும், சரஸ்வதிக்கும் திருக்கல்யாண வைபவம், மக்கள் நலன் கருதியும், கல்வி நலனுக்காகவும், லோபா முத்திரை அகத்தியர் வழிபாட்டு அடியார்களும், கிராம மக்களும் இணைந்து நடத்தினர். இக்கிரமாத்தில் கருங்கல்லால் கட்டப்பட்ட பெரிய சிவன் கோவில் உள்ளது. பல நூற்றாண்டுகள் தாங்கி நிற்கும் இக்கோவில், தற்போது சிதலமடைந்து, திருப்பணி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. உலக நலன், விவசாய நலன் வேண்டியும், கோவிலுக்கு விரைவில் திருப்பணி நடக்கவும், கோவிலின் வடமேற்கு மூலையில், மகாலட்சுமி, சரஸ்வதிக்கு புதிதாக சன்னதி கட்டி, கருங்கல் மூலவரையும் வைத்து, அண்மையில் கும்பாபிஷேகம் நடந்தது. கோவிலில் முதன்முறையாக பிரம்மா சரஸ்வதி திருக்கல்யாணம் நேற்று நடந்தது. ஊர்மக்களும், பெண்களும், நூற்றுக்கு மேற்பட்ட தட்டுகளில் பழம், பலகாரம், பட்டாடை, வெற்றிலை பாக்கு உள்ளிட்ட சீர்வரிசை வந்து, 7 வாழை மரங்கள் நட்டு, அதில் சப்த மாதாக்களை வரவழைத்து திருமணம் நடந்தது. இதனால் கன்னிப்பெண்களின் திருமண தடைநீங்கும் என நம்பப்படுகிறது. விழா முடிந்ததும் அனைவருக்கும் திருமண விருந்து நடந்தது. இந்நிகழ்ச்சியில் அனைத்து பகுதிகளிலிருந்தும், ஏராளமான  பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar