Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரமடை அரங்கநாதர் கோவில் உண்டியலில் ... தளவாய்புரத்தில் 8 கோயில்களில் பூக்குழி: விடிய விடிய பக்தர்கள் நேர்த்திக்கடன் தளவாய்புரத்தில் 8 கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் சுதை சிற்பங்கள் உடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில் சுதை சிற்பங்கள் உடைப்பு

பதிவு செய்த நாள்

09 ஏப்
2026
10:04

திருச்சி மாவட்டம், துறையூரில் உள்ள பழமையான காசி விஸ்வநாதர் கோவிலில், சுதை சிற்பங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டுள்ளன.


திருச்சி: துறையூர், காசி விஸ்வநாதர் கோவில் முகப்பில் இருந்த சிற்பங்களை சிலர் பெயர்த்து எடுத்துச் சென்றதாக, போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது. திருச்சி மாவட்டம், துறையூர், மூங்கில் தெப்பக்குளம் அருகே, பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில், கடந்த 2024ல் கும்பாபிஷேகம் நடை பெற்றது. இருப்பினும் , சில பணிகள் மட்டும் நிறைவடையாமல் உள்ளன. அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலாக இருந்த போதிலும், அங்கு பராமரிப்பு பணிகள் செய்த சிலர், கோவிலை கட்டுப்பாட்டில் வைத்து உள்ளனர். இந்த கோவிலின் நுழைவாயில் மண்டபத்தின் மீது, சிவபெருமான் வரலாற்றை கூறும் சுதை சிற்பங்கள் அமைக்கப்பட்டிருந்தன.


முன் மண்டபத்தின் மீது உள்ள சுதை சிற்பங்களுக்கு வர்ணம் பூசுவதற்கு, தனியார் அமைப்பினர் அறநிலையத் துறையிடம் அனுமதி கோரி இருந்தனர். இந்நிலையில், கோவில் முன் மண்டபத்தின் மீது இருந்த சிற்பங்கள் பெயர்த்து எடுக்கப்பட்டு இருந்தன. கோவில் செயல் அலுவலர் ராஜகோபால், அதே பகுதியைச் சேர்ந்த, ஜெயலட்சுமி, ஸ்ரீதர், நக்கீரன் ஆகிய மூவர் சிலையை உடைத்ததாக, துறையூர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar