Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பராபவ ஆண்டு வைகாசி மாத பிறப்பு; பழநி ... திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சொகுசு கார் நன்கொடை அளித்த சென்னை பக்தர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் வைகாசித் திருவிழா விநாயகர் ஊர்வலத்துடன் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் வைகாசித் திருவிழா விநாயகர் ஊர்வலத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

15 மே
2026
03:05

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் ஐயனார் கோயில் வைகாசி விசாகத் திருவிழா விநாயகர் ஊர்வலத்துடன் இன்று துவங்கியது.


சிவகங்கை தேவஸ்தானத்திற்குட்பட்ட இக்கோயில் வைகாசி விசாகத் திருவிழா மே 24ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி திருவிழா நடத்த காணிக்கை பெறும் ஐதீகத்திற்காக உற்சவ விநாயகர் கிராமத்தில் உள்ள சந்திவீரன் கூடத்தில் எழுந்தருளினார். மே 14 இரவு 10:00 மணிக்கு கோயிலில் இருந்து மாடுகள் பூட்டப்பட்ட சப்பரத்தில் எழுந்தருளிய விநாயகர் கீழக்காடு ரோடு வழியாக கிராமத்திற்கு அழைத்துவரப்பட்டார். வழி நெடுகிலும் முக்கிய இடங்களில் கிராம மக்கள் வழிபாடு செய்து திருவிழா நடத்த காணிக்கை வழங்கினர். அதிகாலை 2:00 மணிக்கு சந்திவீரன்கூடம் வந்து சேர்ந்த விநாயகருக்கு தொடர்ந்து 10 நாள் கோயிலில் இருந்து தளிகை என்னும் நைவேத்தியம் கொண்டுவரப்பட்டு வழிபாடுகள் நடக்கும். 10 வது நாளான மே 24ஆம் தேதி காணிக்கை பணத்துடன் விநாயகர் கோயிலுக்கு திரும்புவார். அந்தப் பணத்தைக் கொண்டே ஐயனாருக்கு திருவிழா நடத்தப்படுவதாக ஐதீகம். அன்றைய தினம் காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கும். தொடர்ந்து பத்து நாள் மண்டகப்படியாக நடைபெறும் இத் திருவிழாவில் மே 28 ல் திருக்கல்யாணம், ஜூன் 1ல் தேரோட்டம், ஜூன் 2 ஆம் தேதி பூப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை சிங்கம்புணரி கிராமத்தார்கள், தேவஸ்தானத்தினர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar