Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பாலை இஸ்கான் மையம் சார்பில் 12 ... சங்கடஹர சதுர்த்தி, திருவாதிரை: விநாயகரை வழிபட வேண்டும் வரம் கிடைக்கும்! சங்கடஹர சதுர்த்தி, திருவாதிரை: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலக்காடு கல்லேகுளங்கரை கதகளி கிராம ஆண்டு விழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பாலக்காடு கல்லேகுளங்கரை கதகளி கிராம ஆண்டு விழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

20 மே
2026
08:05

​பாலக்காடு ; பாலக்காடு கல்லேகுளங்கரை கதகளி கிராமத்தின் ஆண்டு விழா வெகு விமர்சியாக நடந்து வருகிறது.

மூன்று நாட்களாக நடக்கும் விழாவின் முதல் நாளான நேற்று முன்தினம் கல்லேகுளங்கரை ஏமூர் பகவதி அம்மன் கோவில் சப்தாக மண்டபத்தில் கோலாகலமாகத் தொடங்கியது.

​கதகளி உலகின் மாபெரும் கலைஞரான கலாமண்டலம் டாக்டர் ராமன்குட்டி நாயரின் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவப்படத்திற்கு முன்பாக கதகளி கிராமத்து மாணவர்களும் கலை ரசிகர்களும் இணைந்து 101 விளக்குகளை ஏற்றி தங்களது அஞ்சலியைச் செலுத்தினர்.​​இதனைத் தொடர்ந்து, கதகளி கிராம மாணவர்களின் நவகதகளி குருஸ்மரணகீதம் என்ற பாடி ஆடும் (சொல்லியாட்டம்) நிகழ்ச்சி அரங்கேறியது. மேலும், கதகளி கலையின் பாரம்பரிய பாணிகளான கல்லடிக்கோடன், கப்ளிங்காடான் மற்றும் கல்லுவழி ஆகிய நெறிகளில் அமைந்த தோடயத்ரயம் மேடையேற்றப்பட்டது.​தொடர்ந்து நடைபெற்ற கதகளியின் தோடய பாணிகள் குறித்த கருத்தரங்கிற்கு விஜயகிருஷ்ணன் நெறியாளராகச் செயல்பட்டார். இதில் கலாமண்டலம் பிரசாந்த், கலாமண்டலம் ரவிகுமார், கலாமண்டலம் அருண் வாரியர் மற்றும் அனூப் வெள்ளானி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.  நேற்று காலை 8 மணிக்கு செம்பை நினைவு சங்கீதக் கல்லூரியில் புறப்பாடு நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து ​சுபத்ராஹரணம், கல்யாணசௌகந்திகம், ​ராஜசூயம்,​நரகாசுரவதம், ​சீதாசுயம்வரம்,​பாலிவிஜயம்,​தக்ஷயாகம்

​ஆகிய புகழ்பெற்ற 7 கதகளி கதைகள் மேடையேறியது. இந்நிகழ்ச்சியில் 9 வயது சிறுமி முதல் 61 வயது மூதாட்டி வரையிலான பல்வேறு வயதுடைய பெண்கள் கதகளி வேடமேற்று நடித்து இந்த ஆண்டு விழாவின் தனிச்சிறப்பாகும். நாளை காலை 9.30 மணிக்கு நடைபெறும் நிறைவு விழாவை எம்.பி. ஸ்ரீகண்டன் தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இவ்விழாவில் எம்.எல்.ஏ. பிரபாகரன் , மாவட்ட கலெக்டர் மாதவிக்குட்டி மற்றும் புகழ்பெற்ற கலைஞர் கலாமண்டலம் சிவன் நம்பூதிரி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கின்றனர். விழாவின் இறுதி நிகழ்வாக தேவி மகாத்மியம் கதகளி அரங்கேற்றத்துடன் இந்த ஆண்டு விழா நிறைவடைகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar