பாடுபவர்களை பாகவதர் என்று குறிப்பிடுவர். இந்த சொல்லுக்கு பக்தர் அடியவர் இறைவனை வழிபடுபவர்கள் என்ற பொருள்களும் உண்டு. விஷ்ணுவின் பக்தனை பாகவதன் என்று குறிப்பிடுவது வழக்கம். பாகவதர்களின் பெருமையை உணர்த்தும் ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார். இவர் விஷ்ணுவின் பக்தராகி, பாகவதர்களின் பாதம்பட்ட மண்ணை வணங்கி ஆழ்வார் களில் ஒருவரானார். திருமாலிடம் தூய அன்பு செலுத்தும் அனைவருமே பாகவதர் என்று போற்றுகிறது வைணவம்.