Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தீவனுார் விநாயகர் கோவிலில் குரு ... காஞ்சிபுரம் கோவில்களில் குரு பெயர்ச்சி விழா விமரிசை காஞ்சிபுரம் கோவில்களில் குரு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சூலக்கல் மாரியம்மன் திருவிழாவில் மடிப்பிச்சை ஏந்தி, அடி அளந்து வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சூலக்கல் மாரியம்மன் திருவிழாவில் மடிப்பிச்சை ஏந்தி, அடி அளந்து வழிபாடு

பதிவு செய்த நாள்

26 மே
2026
05:05

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் மனமுருகி வேண்டி, அடி அளந்தும், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றியும் வழிபாடு செய்கின்றனர்.

பொள்ளாச்சி, சூலக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 11ம் தேதி திருத்தேர் முகூர்த்த கால் நிகழ்ச்சியுடன் துவங்கியது.  கடந்த, 12ம் தேதி  வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா நடந்தது. 18ம் தேதி இரவு, கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும், 19ம் தேதி இரவு, கம்பம் நடும் விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றன.

கடந்த, 20ம் தேதி கொடியேற்றமும், தினமும் காலை, 9:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.கோவில் திருவிழா, 18 கிராமங்களில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. பக்தர்கள் ஈரத்துணியுடன் வேப்பிலை ஏந்தி, வீடு, வீடாக சென்று மடிப்பிச்சை பெற்றனர். அதன்பின், அம்மனை மனமுருகி நினைத்து தரையில் அடி அளந்து கும்பிட்டு வழிபாடு செய்தபடி கோவிலுக்கு வந்தனர். கோவிலை சுற்றி வளம் வந்த பின், கம்பத்துக்கு முன் மடிப்பிச்சையாக கொண்டு வந்த அரிசியை வழங்கி அம்மனை வழிபட்டனர். ‘மனக்குறையெல்லாம் போக்கி நோய் நொடியின்றி வாழ வேண்டும்; மும்மாரி மழை பெய்து, விவசாயம் செழிக்க வேண்டும்,’ என வழிபட்டனர். மேலும், கோவிலில் உள்ள கம்பத்துக்கு மஞ்சள் நீர் ஊற்றியும், பூவோடு எடுத்தும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்தி, அலகு குத்தி ஊர்வலமாக வந்து அம்மனை வழிபட்டனர்.  இன்று திருக்கல்யாண உற்சவமும், நாளை தேரோட்டமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, புரவிபாளையம் ஜமீன் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார், அறங்காவலர் குழு தலைவர் கொற்றவேலு, அறங்காவலர்கள் சுதாகர், பாலசுப்ரமணியம், பழனிசாமி, கோவில் செயல் அலுவலர் சீனிவாச சம்பத் ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலம் திரிம்பகேஸ்வர் க்ஷேத்திரத்தில் சிம்மஸ்த கும்பமேளா தொடக்க விழா ... மேலும்
 
temple news
மகாராஷ்டிரா: மகாராஷ்டிர மாநிலத்தின் நாசிக் – திரிம்பகேஷ்வர் சிம்மஸ்த கும்பமேளா, பாரம்பரியக் ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத் மாநிலம் வதோதரா அருகே பய்லியில் உள்ள அர்ஷ வித்யா மந்திருக்கு, விஜயேந்திர சரஸ்வதி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் துணை ஜனாதிபதி சி.பி ராதாகிருஷ்ணன் சுவாமி தரிசனம் செய்து ... மேலும்
 
temple news
கோவை: ஐப்பசி மாதம் இரண்டாவது சனிக்கிழமையை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரிவரதராஜ பெருமாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar