காஞ்சி ஸ்ரீ மஹாஸ்வாமிகளின் 133வது ஜெயந்தி மஹோத்ஸவம்; காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் துவக்கம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
29மே 2026 12:05
காஞ்சிபுரம்: ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் 133வது ஜெயந்தி மஹோத்ஸவம் காஞ்சிபுரம் ஸ்ரீமடத்தில் இன்று துவங்கியது. இன்று மே 29 முதல் 31 வரை சிறப்பபாக கொண்டாடப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ மடத்தில் சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் மூன்று நாள் மஹோத்ஸவம் இன்று காலை வேதபாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து வித்வத் சதங்கள், உபன்யாசம்கள், நாம சங்கீர்த்தனம், கர்நாடக சங்கீதம் போன்றவை நடைபெறுகிறது. முன்னதாக நேற்று பூஜ்ய ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் பூஜ்ய ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் சிம்ம வாகனத்தில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீ வரதராஜ சுவாமி உற்சவ மூர்த்தியை தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி பிரம்மோத்ஸவத்தின் முதல் நாள் நிகழ்ச்சியில் வேத முழக்கங்களுடன், பூஜ்ய சங்கராச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி தினமான மே 31 அன்று காலை 7.00 மணிக்கு மேல் ருத்ர பாராயணம், ஜபம், ஹோமம் போன்றவையும், மதியம் 12.30 மணிக்குள் ஸ்ரீ மஹாஸ்வாமிகள் பிருந்தாவனத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனை, மகா தீபாராதனையும் நடைபெறுகிறது. இன்று முதல் மூன்று நாட்களும் பல்வேறு சிறப்பு வழிபாடுகளும், சங்கீதா உபாசனா நடைபெறுவது குறிபிடத்தக்கது.