Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இன்று காஞ்சிப்பெரியவர் பிறந்த ... கொங்கன கிரி கந்தபெருமான் கோவிலில்  வைகாசி விசாக தேரோட்டம் கொங்கன கிரி கந்தபெருமான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி தேரோட்டம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி தேரோட்டம்

பதிவு செய்த நாள்

31 மே
2026
10:05

மதுரை; கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா இன்று தேரோட்டம் கோலாகலமாக நடைப்பெற்று வருகிறது: ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்து வருகின்றனர்.

மதுரை நகரின் மத்தியில் அமைந்துள்ள கூடலழகர் பெருமாள் திருக்கோயில் 108 வைணவ தலங்களில் பிரசித்தி பெற்ற கோயிலாகும். இந்த கோவிலில் வைகாசி பெருந்திரு விழா 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து 14 நாட்கள்  தினமும் காலை, மாலையில் பெருமாள் சிம்மம், கருடன், அனுமார், சேஷ, யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார் விழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்ட வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றுவருகிறது.

இதனை முன்னிட்டு மதுரை டி.எம்.கோர்ட் பகுதியில் அலங்கரிக்கப்பட்ட தேரில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள். ஸ்ரீ தேவி பூதேவி. தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். சிறப்பு பூஜைகளை தொடர்ந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி சாலை, மேலமாசி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் வழியாக வலம் வந்த தேரினை சாலைகளின் இருபுறங்களிலும் நின்றிருந்த ஆயிரகணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை அலங்கார திருமஞ்சனமும் நாளை மறுநாள் சுவாமி குதிரை வாக னத்தில் வைகையாற்றில் இறங்கி ராமராயர் மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அங்கு தசாவதார நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது. இதை தொடர்ந்து கருட வாகனத்தில் புறப்பாடு நடைப்பெறுகிறது. தேரோட்டத்தை முன்னிட்டு 300-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar