சாத்தாவுராயன் காளியம்மன் கோயில் பொங்கல் உற்ஸவ விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூன் 2026 12:06
பாலமேடு; பாலமேட்டில் 24 மனை தெலுங்கு பட்டிசெட்டி உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட சாத்தாவுராயன், காளியம்மன் கோயில் பொங்கல் உற்சவ விழா நடந்தது.முதல் நாள் விழாவில் சாத்தாவுராயன் கோயிலில் சுவாமிக்கு புஷ்ப அலங்காரம்,காளியம்மன் சக்தி கரகம் அலங்கரிக்கப்பட்டு முளைப்பாரி ஊர்வலத்துடன் நகர்வலம் நடந்தது. சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள், திருவிளக்கு பூஜை நடந்தன. 2ம் நாள் பக்தர்கள் மாவிளக்கு, பால்குடம் அக்னிசட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பழ தட்டுக்களுடன் ஊர்வலமாக சாத்தாவுராயன் கோயிலுக்கு சென்று பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். 3வது நாள் சக்தி கரகம் மற்றும் முளைப்பாரியை ஊர்வலமாக எடுத்து சென்று கரைத்தனர். சுவாமி, அம்மனுக்கு மஞ்சள் நீராடுதல் விழா நடந்தது. ஏற்பாடுகளை பாலமேடு, சென்னை வாழ் 24 மனை தெலுங்கு பட்டிசெட்டி உறவின் முறையினர் செய்தனர்.