Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  வைகாசி விசாகம்: ஊட்டி கோவில்களில் ...  சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி வசந்த விழா தீர்த்தவாரி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் வசந்த உற்ஸவம் நிறைவு; மணிமுத்தாற்றில் கஜேந்திர மோட்சம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருக்கோஷ்டியூரில் வசந்த உற்ஸவம் நிறைவு; மணிமுத்தாற்றில் கஜேந்திர மோட்சம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2026
03:06

திருக்கோஷ்டியூர்;  திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயில் வசந்த உற்ஸவ விழாவை முன்னிட்டு கருவேல்குரிச்சி மணிமுத்தாற்றில் நடந்த கஜேந்திர மோட்ச வைபவத்தை பக்தர்கள் தரிசித்தனர்.

சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வசந்த உத்ஸவம் நான்கு நாட்கள் நடைபெறும். அகத்திய முனிவரின் சாபத்தால் கஜேந்திர யானையாக மாறிய மன்னனுக்கும்,முதலையாக மாறிய கந்தர்வனுக்கும் விஷ்ணு சக்கராயுதத்தால் சாப விமோசனம் பெறும் புராணத்தை விளக்கும் ‛ கஜேந்திர மோட்சம்’ வைபவம் நான்காவது நாளில் நடைபெறும். மே 29ல் கோயில் ஆண்டாள் சன்னதி அருகில் யாகசாலை பூஜைகள் துவங்கி பெருமாளுக்கு காப்புக்கட்டி உத்ஸவம் துவங்கியது.

மறுநாள் சர்வ அலங்காரத்தில் சுவாமி ஆஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, கருவேல்குரிச்சி மணிமுத்தாறு மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து கருவேல்குரிச்சி மண்டகப்படி பூஜைகள், தீபராதனை நடந்தது. இன்று  அதிகாலை 5:50 மணிக்கு  கருடவாகனத்தில் பெருமாள் மண்டபத்திலிருந்து புறப்பாடாகி,பக்தர்களுடன் ஊர்வலமாக மேளதாள,வாத்தியங்களுடன் மணிமுத்தாற்றில் எழுந்தருளினார். வழியில் கிராமத்தினர் அர்ச்சனை செய்து பெருமாளை வழிபட்டனர். தொடர்ந்து கோயில் யானை வந்தவுடன் ‛கஜேந்திர மோட்ச’ பூஜைகளை பட்டாச்சார்யர்கள் நடத்தினர்.மோட்ச தீபம் ஏற்றப்பட்டது. சூரிய உதயத்தின் போது, கஜேந்திர யானை ஆற்றுக்குள்ளிருந்து மூன்று முறை பிளிறியது. தொடர்ந்து பெருமாளின் சந்தனம்,சடாரி யானைக்கு சார்த்தப்பட்டு மோட்சம் அளிக்கப்பட்டது. பின்னர், யானைக்கு பட்டாச்சார்யர்கள் மாலை அணிவித்து பழம் வழங்கினர். தொடர்ந்து யானை மீது ஆற்று நீர் தெளிக்கப்பட்டது. பின்னர் யானை பெருமாளை வணங்கி மூன்று முறை வலம் வந்து வழிபட்டது. ஏராளமான கிராமத்தினர் கூடி மோட்சம் வேண்டி பிரார்த்தித்தனர். பின்னர் சுவாமி மீண்டும் கோயில் எழுந்தருளினார். ஏற்பாட்டினை தேவஸ்தானம்,கருவேல்குரிச்சி கிராமத்தினர் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூரில் மாத பூசம் தினமான இன்று வள்ளலார் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.கடலூர் மாவட்டம், ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar