Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜ பெருமாள் கோவிலில் ...  நெல்லிக்குப்பம் பூலோகநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு  நெல்லிக்குப்பம் பூலோகநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பூர் ஸ்ரீவீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2026
07:06

 திருப்பூர்: சைவ மற்றும் வைணவ ஒற்றுமைக்கு உன்னத எடுத்துக்காட்டாகத் திகழும் திருப்பூர் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில்களின் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, கடந்த மே 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது.

விழாவின் தொடர்ச்சியாக, கடந்த 28-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், கருட சேவை வழிபாடுகளும் நடைபெற்றன. நேற்று முன்தினம் ஸ்ரீ விஸ்வேஸ்வர சுவாமி தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது. நேற்று, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக ஸ்ரீ வீரராகவ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். மாலை 5:30 மணியளவில், மக்கள் பிரதிநிதிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள் பக்திப் பெருக்குடன் தேரின் வடம்பிடித்துத் தேரோட்டத்தைத் துவக்கி வைத்தனர்.

வேத விற்பன்னர்களின் வேத பாராயணங்களும், நாமகீர்த்தனைகளும் காற்றில் தவழ்ந்து வந்தன. கொங்கு மண்ணின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் பெருஞ்சலங்கை ஆட்டம் மற்றும் பவளக்கொடி கும்மியாட்டம் ஆகியவை தேருக்கு முன்னால் அணிவகுக்க, ஏராளமான பக்தர்களின் கரகோஷங்களுக்கு நடுவே திருத்தேர் ஆடி அசைந்தபடி கம்பீரமாக நகர்ந்தது.  தேரோடும் வீதியெங்கும் அலைகடலெனத் திரண்டிருந்த பக்தர்கள், கோவிந்தா… கோபாலா… பெருமாளே… எனப் பக்திப் பரவசத்துடன் கோஷமிட்டபடி, கரம் கூப்பி இறைவனை மனமுருகிவழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar