Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூரி ஜெகன்னாதர் கோயில் ரத யாத்திரை; ... காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உத்சவம் விமரிசை காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருவின் குருபூஜை விழா; வெள்ளி பல்லக்கில் ஆதீனம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருவின் குருபூஜை விழா; வெள்ளி பல்லக்கில் ஆதீனம்

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2026
10:06

மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனம் குரு முதல்வர் குருவின் குருபூஜை விழாவை முன்னிட்டு தருமபுரம் ஆதீனகர்த்தரை வெள்ளி நாற்காலி பல்லக்கில் பக்தர்கள் தூக்கி செல்ல முந்தைய ஆதீனங்களின் குருமூர்த்தங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. புகழ்பெற்ற தருமபுரம் ஆதீனத்தின் பட்டிணப்பிரவேச விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. 


மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. 10-ஆம் நாள் விழாவான இன்று ஆதீனத்தை தோற்றுவித்த குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை திருநாள் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு ஞானபுரீஸ்வரர் கோவிலில் வழிபாடு மேற்கொண்டு தருமபுரம் மேல வீதியில் உள்ள முந்தைய ஆதீனங்களின் குரு மூர்த்தங்களுக்கு தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்,  வெள்ளி நாற்காலி பல்லக்கில் எழுந்தருளி பக்தர்கள் சுமந்து செல்ல, மூன்று யானைகள், குதிரை ஆகிய மங்கல சின்னங்கள் முன் செல்ல, ஆதீனத் திருக்கூட்டத்து அடியவர்களுடன் ஊர்வலமாக சென்று வழிபாடு நடத்தினார்.  தொடர்ந்து வனதுர்க்கை அம்மன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொண்டார். முன்னதாக இதில் ஆதின கட்டளை தம்பிரான்கள், உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். பெருவிழாவின் சிகர நிகழ்வாக 11ஆம் நாளான நாளை தருமபுரம் ஆதீனகர்த்தரை பக்தர்கள் சிவிகை பல்லக்கில் எழுந்தருளச் செய்து சுமந்து ஆதீனத்தின் நான்கு வீதிகளை சுற்றி வலம் வரும் பட்டிணப்பிரவேசம் நிகழ்வு  இரவு 9 மணி அளவிலும், மறுநாள் அதிகாலையில் ஞானகொலு காட்சியும் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar