பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் தீர்த்தவாரி உத்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06ஜூன் 2026 09:06
பூந்தமல்லி: பூந்தமல்லியில் பழமை வாய்ந்த திருக்கச்சி நம்பிகள் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு வைகாசி பிரம்மோத்சவ விழா, கடந்த மாதம் 28ல் தொடங்கியது. விழாவின் ஒன்பதாம் நாளான தீர்த்தவாரி உத்சவம் நேற்று நடந்தது. பகல் 12:30 மணிக்கு, வரதராஜ பெருமாள் மற்றும் சக்கரத்தாழ்வார் கோவிலில் இருந்து திருக்குளத்தில் எழுந்தருளினர். அங்கு, தீர்த்தவாரி உத்சவம் விமரிசையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். முன்னதாக, கோவில் குளம் வறண்டு கிடந்ததால், டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் ஊற்றி, குளத்தில் தண்ணீர் நிரப்பட்டது.